வெள்ளி, 7 ஜனவரி, 2022

சமூகநீதியை உறுதிசெய்த உச்சநீதிமன்றம்.. OBC இடஒதுக்கீடு தி.மு.க மேற்கொண்ட தொடர் முயற்சிகள்..!

கலைஞர் செய்திகளை Vignesh Selvaraj  : மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதியின்பால் பற்றுகொண்ட தி.மு.கழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி!" என தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். OBC இடஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க மேற்கொண்ட தொடர் முயற்சிகள் இங்கே:

26.07.2019 - OBC இடஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் பி.வில்சன் எம்.பி. பேச்சு.

01.11.2019 - OBC இடஒதுக்கீடு தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம்.

21.11.2019 - OBC இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க தி.மு.க சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்.

22.11.2019 - எம்.பி.பி.எஸ். ஓ.பி.சி. இட ஒதுக்கீடு: மோடி வெள்ளை அறிக்கை வெளியிட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியறுத்தல்.

06.12.2019 - OBC இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் பி.வில்சன் எம்.பி. பேச்சு.

09.12.2019 - OBC இடஒதுக்கீடு பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி. பேச்சு.

06.01.2020 - OBC இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பான கடிதத்துடன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் நேரில் சந்தித்தார்.

15.05.2020 - OBC இடஒதுக்கீடு விவகாரத்தில் ஒன்றிய அரசு சரியான பதில் அளிக்கவில்லை என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை.

சமூகநீதியை உறுதிசெய்த உச்சநீதிமன்றம்.. OBC இடஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க மேற்கொண்ட தொடர் முயற்சிகள்..!

27.05.2020 - மருத்துவப் படிப்பில் சமூகநீதி பின்பற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

28.05.2020 - அகில இந்திய மருத்துவப் படிப்பில் OBC இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என உச்சநீதிமன்றத்தை நாடியது தி.மு.க.

31.05.2020 - மருத்துவப் படிப்புகளில் OBC இடஒதுக்கீட்டை உள்நோக்கத்துடன் மறுத்துவரும் மத்திய அரசைக் கண்டித்து காணொலியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்.

12.06.2020 - OBC இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் தி.மு.க வழக்கறிஞர் பி.வில்சன் உச்சநீதிமன்றத்தில் தனது வாதத்தை எடுத்து வைத்தார். இதில் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

11.6.2020 - சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு,

19.6.2020 - மருத்துவ மாணவர் சேர்க்கையில் OBC மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதாக உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்தது.

19.6.2020 - இது முதல்கட்ட வெற்றியே. OBC மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு பெற தி.மு.க தொடர்ந்து போராடும். - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதன்படி சட்டரீதியாகத் தொடர்ந்து தி.மு.க போராடிய நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

07.01.2022 - மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு அறிக்கை செல்லும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ். போபண்ணா அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

07.01.2022 - OBC வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, சமூகநீதியின்பால் பற்றுகொண்ட தி.மு.கழகத்திற்கு கிடைத்த முக்கியமான வெற்றி. இத்தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல்!" என தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக