சனி, 8 ஜனவரி, 2022

செங்கல்பட்டு - மொய்தீன்- தினேஷ் என்கவுண்டரில் சுட்டு கொலை ! இரட்டைக் கொலையில் தொடர்புடையவர்கள்

 tamil.news18.com - : செங்கல்பட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பியது.
செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி அடுத்தடுத்து இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பயங்கர சம்பத்தில் ஈடுபட்ட இருவரை வைது செய்ய முயன்றபோது அவர்கள் காவல்துறையினரை தாக்கியதால், தற்காப்பிற்காக அவர்களை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.


செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான நகர காவல்நிலையம் எதிரில் உள்ள டீக்கடைக்கு கே.தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் என்பவரை, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பியது.

அதனை தொடர்ந்து, அதே கும்பல் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சீனுவாசன் என்பவரது மகன் மகேஷ் என்பவரை அவரது வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்த போதே சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தலைமறைவானது.

கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களையும் மீட்ட செங்கல்பட்டு நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய தினேஷ், மாதவன், மைதீன் ஆகியோரை கைது செய்ய, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், மொய்தீன், தினேஷ் ஆகியோரை பிடிக்க போலீசார் முயன்ற போது காவல்துறையினரை தாக்க முயன்றதால் அவர்களை தற்காப்பிற்கா காவல்துறையிர் சுட்டுக் கொன்றனர்.
Published by:Suresh V
First published:January 07, 2022, 10:07 IST

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக