திங்கள், 1 நவம்பர், 2021

நடிகர் ரஜினிகாந்த் குணமாகி மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பினார்

 Actor Rajinikanth discharged from hospital

நக்கீரன் செய்திப்பிரிவு  : கடந்த 25 ஆம் தேதி டெல்லியில் தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது.
இதற்காக டெல்லி பயணம், விழாவில் பங்கேற்றது, பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றது, தொடர்ந்து நண்பர்கள் சந்திப்பு, வாழ்த்து பெற்றது என இருந்தார்.
 டெல்லி பயணம், தலைவர்கள், நண்பர்கள் சந்திப்பு என இருந்தநிலையில் சென்னை திரும்பினார். தலைச்சுற்றல் காரணமாகக் கடந்த 28 தேதி சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூன்று நாள் சிகிச்சைக்கு பின் தற்போது அவர் வீடு திரும்பினார்   


இரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பு நீக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. சில நாட்களில் அவர் குணமாவார்   என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர்  குணமாகி  போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்றார். அவரது குடும்பத்தினர் சிகிச்சை முடிந்து வந்த ரஜினிகாந்த்தை மகிழ்ச்சியாக வரவேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக