ஞாயிறு, 31 அக்டோபர், 2021

ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ரகசியப் போர் தொடுக்கும் தாலிபன்

 சிகந்தர் கெர்மனி   -      பிபிசி செய்திகள், ஜலாலாபாத் :  ஜலாலாபாத்தில் தலிபான் வீரர். இந்த குழு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான் கிளை கிட்டத்தட்ட தினமும் தாக்குதலை சந்தித்து வருகிறது.
படக்குறிப்பு,ஜலாலாபாத்தில் தலிபான் வீரர். இந்த குழு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான் கிளை கிட்டத்தட்ட தினமும் தாக்குதலை சந்தித்து வருகிறது.
கிழக்கு ஆப்கானிஸ்தானின் புறநகர் பகுதியில் உள்ள ஜலாலாபாத் நகரில் மனித உடல்கள் அவ்வப்போது புதைக்கப்படுக்கின்றன.
சிலர் சுட்டுக்கொல்லப்படுக்கின்றனர்; சிலர் தூக்கிலிடப்படுக்கின்றனர்; சிலரின் தலை துண்டிக்கப்படுகிறது. பலரின் பாக்கெட்டுகளில் கையால் எழுதப்பட்ட குறிப்புகள் உள்ளன.

அதில் அவர்கள் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான் கிளையைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இத்தகைய சட்டத்துக்கு புறம்பான கொடூர கொலைகளுக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை; ஆனால், இதற்கு தாலிபன்தான் பொறுப்பு என்று பலரும் கருதுகின்றனர். ஆகஸ்ட் மாதம் காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு 150க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க காரணமாக இருந்த தற்கொலைகுண்டு தாக்குதலை நடத்தியது.

இதற்கு தாலிபான் கடுமையான பதிலடி கொடுக்கிறது. இந்த இரு அமைப்புகளும் மிகவும் மூர்க்கமான ரத்தவெறி கொண்ட போரை நடத்தி வருகிறது. ஜலாலாபாத் அதற்கு முதன்மையாக இருக்கிறது.

தாலிபன்களின் கிளர்ச்சி முடிவுக்கு வந்ததையடுத்து, ஆப்கானிஸ்தான் தற்போது சற்றே அமைதியாக உள்ளது. ஆனால், குறிப்பார்த்து நடத்தும் தாக்குல்களை, இந்த குழுவினர் கிட்டத்தட்ட தினமும் ஜலாலாபாத்தில் நடத்திவருகின்றனர். ‘தைஷ்’ என்று உள்ளூர் மொழியில் அழைக்கப்படும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு, வீதிகளில் வெடிகுண்டு வீசுவது, கொடூரமான கொலை செய்வது என இதற்கு முந்தைய அரசை தாலிபன் எப்படி வீழ்த்தியதோ, அதே ‘ஹிட் அண்ட் ரன்’ (தாக்கி-ஓடு) முறையைப் பயன்படுத்துகிறது. போதிய அளவு கடுமையான நடவடிக்கை எடுக்கமுடியாமல், பழைய கொள்கைகளை கைவிடுவதாக தாலிபன் மீது ஐ.எஸ் அமைப்பு குற்றம் சாட்டுகிறது. ஐ.எஸ் அமைப்பு மதவெறி தீவிரவாதிகள் என்று தலிபான் அதை நிராகரிக்கிறது.

ஜலாலாபாத் நாங்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரம். இங்குள்ள தாலிபனின் உளவுத்துறை சேவையின் தலைவரின் பெயர் பஷீர். அவருக்கு பெரும் செல்வாக்கு உள்ளது. குனார் என்ற பக்கத்து ஊரில் வலுவாக கால் பதித்திருந்த ஐ.எஸ் அமைப்பை அடியோடு விரட்டியடித்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு.

வீதிகளில் கிடைக்கும் சடலங்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பஷீர் கூறுகிறார். ஆனால், பல ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த பலரை தாலிபன்கள் கைது செய்ததாக பெருமிதத்துடன் கூறுகிறார். முந்தைய அரசால் கைதுசெய்யப்பட்ட பல ஐ.எஸ் பயங்கரவாதிகள், தாலிபன் ஆட்சியை கைப்பற்றியப்போது உருவான குழப்பத்தில், சிறையிலிருந்து தப்பித்து உள்ளனர்.

ஐ.எஸ் அமைப்பு ஓர் அச்சுறுத்தல் என்பதை பொதுவெளியில் பஷீரும், மற்ற தாலிபன்களும் ஒப்புக்கொள்வதில்லை. ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்தது என்றும், தாங்கள் அமைதியையும் பாதுகாப்பையும் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வந்திருப்பதாகவும் கூறுகின்றனர் தாலிபன்கள். இத்தகைய விவரிப்பை மட்டுப்படுத்தும் நோக்கில் எது இருந்தாலும், அதை அவர்கள் வரவேற்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் அதிகாரபூர்வமான ஐ.எஸ் அமைப்பு இல்லை என்று பஷீர் கூறுகிறார். ஆனால், நடப்பவை அதற்கு மாறாக உள்ளது.

“தைஷ் என்ற பெயர் சீரியாவையும் ஈராக்கையும் குறிக்கிறது. ஆப்கானிஸ்தானில் ‘தைஷ்’ என்ற பெயரில் எந்த தீவிரவாத அமைப்புகளும் இல்லை”, என்று அவர் கூறுகிறார்.

அதற்கு பதிலாக, ஐஎஸ் பயங்கரவாதிகளை இஸ்லாமியவாத அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த துரோகிகள் குழு” என்று குறிப்பிடுக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் அதிகாரபூர்வமான ஐ.எஸ் அமைப்பு இல்லை என்று தலிபானின் உளவுத்துறை தலைவர் டாக்டர் பஷீர் கூறுகிறார்.
படக்குறிப்பு,ஆப்கானிஸ்தானில் அதிகாரபூர்வமான ஐ.எஸ் அமைப்பு இல்லை என்று தலிபானின் உளவுத்துறை தலைவர் டாக்டர் பஷீர் கூறுகிறார்.

உண்மையில், ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் அமைப்பினர் “ஐஎஸ்-கோரசன்” (IS-Khorasan) என்ற பெயரில் இயங்கி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இந்த அமைப்பு 2015ஆம் ஆண்டு தன் இருப்பை நிலைநாட்டியது. அதன்பிறகு வந்த ஆண்டுகளில், மிகவும் கொடூரமான தாக்குதல்களை நடத்தியது. ஆனால், தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, அந்நாட்டின் பல பகுதிகளில் தற்கொலைகுண்டு தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இத்தகைய தாக்குதல்களை தாலிபன் எப்போதும் பார்த்ததில்லை.

இந்த மாதத் தொடக்கத்தில், தாலிபனின் முக்கிய பகுதியான கந்தஹார் மற்றும் குண்டாஸ் நகரத்தின் வடப்பகுதியில் ‘ஷியா’ சிறுபான்மையினருக்கு சொந்தமான மசூதிகளை ஐ.எஸ் அமைப்பினர் தாக்கினர்,

ஆனால், இதுகுறித்து கவலையடைய தேவையில்லை என்று பஷீர் வலியுறுத்துகிறார். “நாங்கள் உலகிற்கு கவலைப்பட வேண்டாம் என்று கூறுகிறோம். துரோகிகளின் சிறிய குழு இது போன்ற தாக்குதல்களை நடத்தினால், 52 நாடுகளின் கூட்டுப்படையை எப்படி நாங்கள் போர்முனையில் முறியடித்தமோ, அவர்களையும் அப்படியே வீழ்த்துவோம்”, என்று கூறுகிறார். “இருபது ஆண்டுகளாக கிளர்ச்சிப்போரில் போராடி வருகிறோம்; இந்த கொரில்லா போரையும் எங்களால் தடுக்க முடியும்”, என்று பஷீர் கூறுகிறார்.

ஏற்கனவே பல ஆண்டுகளாக ரத்தவெறி போரால் களைத்து போயிருக்கும் ஆப்கன் மக்களுக்கு ஐ.எஸ் அமைப்பின் வளர்ச்சி அச்சுறுத்தலாக உள்ளது. ஒரு ஆண்டு அல்லது ஆறு மாதங்களில் ஆப்கானிஸ்தானிலுள்ள ஐ.எஸ் அமைப்பு வெளிநாடுகளில் தாக்குதல்களை நடத்தும் அளவுக்கு வளரும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இப்போது வரை, ஆப்கானிஸ்தானில் எந்த பகுதியும் ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இல்லை. நாங்கர்ஹர் மற்றும் குனார் மாகாணங்களில் இந்த குழு முன்னர் தன் அடித்தளத்தை நிலைநிறுத்தியிருந்தது. அதன் பிறகு, தாலிபனும் அமெரிக்க விமானப்படை ஆதரவுடன் ஆப்கன் ராணுவப்படையும் அதனை துரத்தி அடித்தது. தற்போது அமெரிக்க ஆயுதங்களுடன் இருக்கும் 70, 000 தாலிபன் உறுப்பினர்களை ஒப்பிடும்போது இந்த அமைப்புக்கு ஆயிரம் வீரர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள மத்திய ஆசியப் பகுதி மற்றும் பாகிஸ்தானில் இருந்து வெளிநாட்டு போராளிகளை தன் அமைப்புடன் சேர்க்க ஐ.எஸ் முனையும் என்ற அச்சமும் நிலவுகிறது. மேலும், எதிர்காலத்தில் தாலிபன் குழுவில் அதிருப்தியடைந்தவர்கள் சிலர் ஐ.எஸ் அமைப்புடன் சேர்க்கப்படலாம். ஐ.எஸ் அமைப்பை குறிவைத்து ஆப்கானிஸ்தானின் வெளியிலிருந்து,

தாக்குதல் நடத்த அமெரிக்கா நினைக்கிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களை தனியாகவே எதிர்கொள்ள முயற்சிக்கிறது தாலிபன்.

ஐ.எஸ் அமைப்பின் பல உறுப்பினர்கள் அந்த அமைப்பிலிருந்து விலகி, தாலிபன் மற்றும் தனிக்குழுவாக இயங்கும் பாகிஸ்தானி தலிபானிக்கும் சென்றுவிட்டனர். “அவர்களை எங்களுக்கு நன்றாக தெரியும், அவர்களுக்கு எங்களை நன்றாக தெரியும்”, என்று தாலிபன் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் மறைமுகமாக புன்னகைத்துக் கொண்டு கூறுகிறார்.
ஜலாலாபாத்தில் தலிபான் வீரர். மத்திய ஆசியப் பகுதி மற்றும் பாகிஸ்தானில் இருந்து வெளிநாட்டு வீரர்களை தன் அமைப்புடன் சேர்க்க ஐ.எஸ் முனையும் என்ற அச்சமும் நிலவுகிறது.
படக்குறிப்பு,ஜலாலாபாத்தில் தலிபான் வீரர். மத்திய ஆசியப் பகுதி மற்றும் பாகிஸ்தானில் இருந்து வெளிநாட்டு வீரர்களை தன் அமைப்புடன் சேர்க்க ஐ.எஸ் முனையும் என்ற அச்சமும் நிலவுகிறது.

சமீபக்காலமாக, நாங்கர்ஹரில் பஷீரின் படைகளிடம் ஐ.எஸ் அமைப்பில் உள்ள பலரும் சரணைடைத்துவிட்டனர். முன்னாள் தாலிபன் உறுப்பினர் ஒருவர், ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்தப்பின்னர், அவர் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்ததாக கூறுகிறார்.

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய எமிரேட்டை நிலைநிறுத்துவதே தங்களின் ஒரே குறிக்கோள் என்று தொடர்ந்து கூறிவரும் தாலிபன்கள் போல் அல்லாமல், ஐ.எஸ் அமைப்புக்கு உலகளவில் லட்சியங்கள் உள்ளன என்று அவர் கூறுகிறார்.

“உலகம் முழுவதுக்கும் ஐ.எஸ் அமைப்பு மிரட்டல்களை விடுக்கிறது. அவர்கள் தங்களின் ஆட்சியை உலகம் முழுவதும் கொண்டு வர விரும்புகின்றனர். ஆனால், செயல்கள் வார்த்தைகளில் இருந்து வேறுபட்டு இருக்கின்றது. அவர்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றக்கூட வலிமையானவர்களாக இல்லை” , என்கிறார் அவர்.

ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்டம் தொடங்கிவிட்டது என்று ஆப்கன் மக்கள் பலரும் இந்த ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல்களை குறிப்பிடுக்கின்றனர். ஜலாலாபாத்தில், தாலிபன்கள் மட்டும் குறிவைக்கப்படவில்லை. இந்த மாதத் தொடக்கத்தில், பொது சமூக ஆர்வலர் அப்துல் ரஹ்மான் மவீன் ஒரு திருமண விழாவுக்கு சென்று திரும்பும்போது, அவரது வாகனத்தை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. தந்தை சுட்டுக் கொல்லப்பட்டதை பார்த்த அவரது, 10 மற்றும் 12 வயது மதிக்கத்தக்க மகன்கள் பீதியடைந்தனர். இதற்கு பொறுப்பேற்று ஐ.எஸ் ஒரு சிறு அறிக்கை வெளியிட்டது.

அவரது சொந்த ஊரில் இருந்து பேசிய அவரது சகோதரர் ஷத் நூர் விரக்தியில் இருக்கிறார்.

“என் மனத்தின் அடியிலிருந்து, தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்தவுடன், ஊழல், கொலைகள், குண்டுவெடிப்புகள் ஆகியவை ஒழிந்துவிடும் என்று நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் நேர்மறையாகவும் இருந்தோம்.”, என்று கூறினார்.

“ஆனால், தைஷ் என்ற பெயரில், இப்போது எங்கள் மீது ஒரு புதிய உத்தி செலுத்தப்படுகிறது என்று உணர்கிறோம்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக