வெள்ளி, 17 செப்டம்பர், 2021

கள்ளக்காதலுக்காக மகனை( 14 வயது ) காதலன் மூலம் கொலை செய்த தாய் ... சென்னை பொன்னேரியை அடுத்த நெடுவரம்பாக்கம்

illegal love...9 year old boy murder...mother arrested
tamil.asianetnews.co : சென்னை பொன்னேரியை அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். நெல் அறுவடை எந்திர டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி துர்கா. இவர்களுக்கு சூர்யா (14), சந்தோஷ் என்ற மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் சூர்யா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். துர்காவுக்கும் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து பொன்னேரியை அடுத்த நத்தம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி மாணவன் சூர்யா திடீரென மாயமானான். அவனை உறவினர்கள் தேடி வந்தனர். அவனை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இதுபற்றி சோழவரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கோவில் குளத்தில் அழுகிய நிலையில் ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் சிதைந்து காணப்பட்டதால் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

சிறுவன் சூர்யா மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது நெடுவரம்பாக்கத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (21), அண்ணாமலை என்பவர் கடைசியாக சூர்யாவை அழைத்துச் சென்றிருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுவன் சூர்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு உடலை கோவில் குளத்தில் வீசி இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

சூர்யாவின் தாய் துர்காவுக்கும் கோபாலகிருஷ்ணனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.  துர்காவும் கோபாலகிருஷ்ணனும், தனிமையில் உல்லாசமாக இருந்ததை சிறுவன் சூர்யா பார்த்துவிட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக வெளியே சொல்லி விடுவான் என்பதால் பெற்ற மகன் கூட பாராமல் சூர்யாவை தீர்த்து கட்ட கள்ளக்காதலன் கோபாலகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். அவர்களது திட்டப்படி கடந்த 9-ம் தேதி வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த சூர்யாவிடம் நைசாக பேச்சு கொடுத்து கோபாலகிருஷ்ணன் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் கோவில் குளம் அருகே பேசிக்கொண்டிருந்தபோது, கோபாலகிருஷ்ணன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுவன் சூர்யாவின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சூர்யா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதைத் தொடர்ந்து சூர்யாவின் உடலை கோவில் குளத்தில் வீசிவிட்டு கோபாலகிருஷ்ணன் தப்பி சென்றுவிட்டார். மகன் கொலை செய்யப்பட்டுவிட்டதை கள்ளக்காதலன் மூலம் அறிந்த துர்கா எந்தவித பதட்டமும் இல்லாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக