நக்கீரன் செய்திப்பிரிவு : பட்டியலின சமூகத்தினரைப் பற்றி சமூக வலைதளங்களில் இழிவாகப் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையில் சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகார் குறித்து கருத்து தெரிவித்த நடிகை மீரா மிதுன், "தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது" என்று சவால் விடுத்திருந்தார்.
இதற்கிடையே கேரளாவில் பதுங்கியிருந்த அவரை தமிழகக் காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மீீரா மிதுன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக