திங்கள், 16 ஆகஸ்ட், 2021

ஆப்கானிஸ்தான் மக்கள் பயத்தில் வெளியேறி கொண்டிருக்கிறார்கள் Mass Exodus In Kabul

 செல்லபுரம் வள்ளியம்மை  :  ஆப்கானிஸ்தானை விட்டு ஏராளமான மக்கள் வெளியேறி கொண்டிருக்கிறார்கள்  வெளியேற முடியாதவர்கள் ஆங்காங்கே பாதுகாப்பு தேடி இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்
தலிபான்களின் தலைமை மக்களின் பாதுகாப்பும் அமைதியும் தங்களின் முக்கிய கடமை என்று சம்பிரதாயமாக அறிவித்தாலும் மக்கள் அதை பெரிதாக நம்பவில்லை என்றே தெரிகிறது
இப்போது இருக்கும் பள்ளிக்கூடங்களை தகர்த்து விட்டு இசுலாமிய பள்ளி கூட்டங்களை நிறுவுவோம். ஷரியா சட்டத்தை கடுமையாக அமுல் படுத்துவோம் என்றெல்லாம் வீதிக்கு வீதி மக்களை மிரட்ட தொடங்கி விட்டார்கள்
முன்பு போல இல்லாமல் தற்போது சமூக ஊடங்கள் முக்கியத்துவம் பெறுவதால் இந்த செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன

தாலிபானின் மிகப்பெரும் ஸ்பான்சராக செயல்படுவது பாகிஸ்தான்.
தாலிபான்களின் அபின் வியாபாரத்தில்  பாகிஸ்தானுக்கும் பங்கிருக்க வாய்ப்புள்ளது  நேரடியாக இல்லாவிடினும் அவர்களின் பணம் பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் கலந்து இருக்கிறது
முழு பாகிஸ்தான் அரசும் தாலிபான்களோடு ஆதரவில் இருப்பதாக கருத முடியாது
அங்கே போதிய அளவு குழப்பங்கள் உள்ளன
ஆனாலும் பாகிஸ்தான் ராணுவத்தின் பெரும் ஆதரவு இல்லாமல் தாலிபான்களால் இந்த அளவுக்கு அபின் கடத்தல் ஆயுத குவிப்பு போன்றவற்றை நிகழ்த்தி இருக்க முடியாது

காஷ்மீர் மீது சங்கிகள் நடத்திய ஆக்கிரமிப்பு நிச்சயம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஒரு வைட்டமின் மாத்திரையாக கிடைத்திருக்கும்

தாலிபான் என்ற அமைப்பு புதிதாக பாகிஸ்தான் தாலிபான் என்று  அவதாரமெடுத்ததின் பின்னணி கூட  இதன் காரணமாக  இருக்கலாம்
தாலிபான்களோடு ஏற்கனவே ஆப்கான் ஆட்சியாளர்களும் ராணுவத்தினரும் ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருந்ததாக செய்திகள் வருகிறது

பல மாதங்களாக ஆப்கான் ராணுவத்தினருக்கு சம்பளம் சரியாக வழங்க படுவதில்லை என்று தெரிகிறது
பலர் தாலிபான்களால் பணவருவாயை ஏற்கனவே பெற்றிருக்கவும் கூடும்

பெரிதாக  சண்டையே நடக்காமல் அதிகாரம் கைமாறி இருப்பதை ஒரு சாதாரண நிகழ்வாக கருத முடியாது அமெரிக்க சீன பாகிஸ்தானிய அரசுகள் தாலிபான்களோடு ஒரு எழுதாத ஒப்பந்தத்திற்கு வந்திருப்பதாக சந்தேகிக்க இடமுண்டு
அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டுக்குள் தாலிபான்கள் அடக்கி வைக்கப்பட்டு இருந்ததை சாதகமாக பயன்படுத்தி கொண்டு,
காஷ்மீரில் துணிந்து ஒரு அடாவடியை அரங்கேற்றி இருக்கிறார்கள் சங்கிகள்

வாஜ்பாய் ஆட்சியின் போது இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்தியாவில் இருந்து  கடத்தப்பட்ட ஏர் இந்தியா விமான கடத்தல் காரர்களுக்கு  தாலிபான்கள் கந்தகாரில் வைத்து எல்லா வசதிகளும் செய்து கொடுத்த சம்பவம் மறக்க கூடியதா?
அப்போதும் இருந்தது பாஜக அரசுதான்  அவர்கள் எந்த ஒரு எதிர்வினையும்  தாலிபான்களுக்கு எதிராக எடுக்கவில்லை என்பது  எங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய செய்தியாகும்  
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக