ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

வளசரவாக்கத்தில் இலங்கை தமிழர் வீட்டில் 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே-47 ரக துப்பாக்கிகள், 1000 தோட்டாக்கள் கைப்பற்ற பட்டது ..என்எஸ்ஏ சோதனை

தினகரன்  :பூந்தமல்லி: கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த மார்ச் மாதம் தோணி மூலம் கடத்தி வரப்பட்ட 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே-47 ரக துப்பாக்கிகள், 1000 தோட்டாக்களை சுற்றுக்காவல் பணியில் இருந்த கடலோர பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக விழிஞ்சம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பேரை கைது செய்து விசாரித்தனர். பின்னர் இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமை போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, கடந்த மே மாதம் ஆயுதத் தடை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பாக கடந்த 2-ம் தேதி சுரேஷ், சவுந்தரராஜன் ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வு முகமை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக நேற்று சென்னை, திருவள்ளூர் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் உள்பட 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை போலீஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.


இதில் சென்னை வளசரவாக்கம், முரளிகிருஷ்ணா நகரில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சபேசன் (46) என்ற இலங்கை தமிழரின் வீட்டிலும் நேற்று தேசிய புலனாய்வு முகமையின் 5 அதிகாரிகள், வளசரவாக்கம் போலீசாரின் உதவியுடன் சோதனை நடத்தினர்.
 இதேபோல் திருவள்ளூரின் மப்பேடு பகுதியிலும் சோதனை நடந்தது. இச்சோதனையில் செல்போன், சிம் கார்டுகள், டேப்லெட் உள்பட 7 டிஜிட்டல் சாதனங்களும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறுகிறது என தேசிய புலனாய்வு முகமை போலீசார் தகவல் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக