ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

தலிபான்களின் திடீர் எழுச்சியும் காஷ்மீரில் சங்கிகளின் அரசியலும்

செல்லபுரம் வள்ளியம்மை :  எதிர்பார்த்ததை விட வேகமாக தாலிபான்கள் முன்னேறி இருப்பதாக தெரிகிறது  ஆப்கான் தலைநகரமான காபூல் வாசலில் தலிபான்கள் நிலை கொண்டுள்ளார்கள்
ஆப்கான் ஆட்சியாளர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு ஆப்கானை விட்டு வெளிநாட்டுக்கு அரசியல் அடைக்கலம் கோரி செல்ல இருப்பதாக தெரிகிறது
தலிபான்களின் இந்த திடீர் எழுச்சியின் பின்னணியில் உள்ள பல காரணங்களில் காஷ்மீரும் ஒன்றுதான்
சங்கிகள் காஷ்மீரில் செய்த அடி முட்டாள்தனமான அரசியலால் இஸ்லாமிய தீவிர வாதத்திற்கு செங்கம்பளம் விரித்து உள்ளார்கள்
காஷ்மீரில் மோடி அமித் ஷா கும்பல் செய்த அடாவடி அரசியலானது பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளில்  என்ன விதமான எதிர்த்தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்பது கொஞ்சமாவது சிந்தித்தார்களா?
ஒன்றிய அரசின் பூணூல் அதிகாரிகள் கையில் அதிகாரம் கிடைத்ததும் தலை கால் புரியாமல் காஷ்மீரில் ஆடிய ஆட்டத்தின் பக்க விளைவுகளில் தலிபான் தீவிரவாதிகளின் திடீர் எழுச்சியும் ஒன்றுதான்
சங்கிகளின் காஷ்மீரி வெறியாட்டத்தால் உலகின்  கண்களில் ஒன்றியம் இன்று நிர்வாணமாக நிற்கிறது  


இஸ்ரேல் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய சங்கிகள் முழு நாட்டையும் அடகு வைத்து விட்டார்கள் .    அதுவும் யாரிடம்? எதிர்காலம் அதற்குரிய பதிலையே இனி கூறும்.   

Rajendra Babu   :  நான் 2007 ஆகஸ்டு மாதம் ஒரு நெடுஞ்சாலை திட்ட வரைவு பணிக்காக காபூல் சென்று இருந்தேன். ஒரு அமெரிக்கா கம்பனியில் இருந்தேன் அப்போது. அவர்கள் யாரும் காபூல் வர பயந்து என்னையே சாலையை பார்வையிட மற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட கூறினார்கள். காபூல் அருகே உள்ள சாலை அது. நாங்கள் சென்று இருந்த போது 115 கிமீ நீள சாலையில் முதல் 50 கிமீ அரசின் கையிலும் அடுத்த 60 கிமீ தாலிபான்கள் கையிலும் இறுதி 5 கிமீ அரசின் கையிலும் இருந்தது. சாலையிட பார்வையிட சென்ற போது தாலிபான் வசம் இருந்த பகுதியை பார்வையிட அவர்களே எங்களுக்கு துணையாக, பாதுகாப்பாக வந்தார்கள். அவர்களே கடைசி 5 கிமீ பகுதியிலும் துணைக்கு வந்தார்கள், வந்து எங்களை காபூல் ஜலாலபாத் நெடுஞ்சாலையில் விட்டு சென்றார்கள். அப்போது அவர்களே என்னை அங்கிருந்த தாலிபான் தலைவரிடம் அறிமுகப் படுத்தினாகள். அப்போதே அங்கு பாகிஸ்தான் தாலிபான்கள் ஜலாலாபாத் பகுதியில் பாகிஸ்தான் தாலிபான்கள் இருந்தார்கள்.
அதன் பிறகு 2016 - 17 இல் பாமியான் - மஜார் இ ஷெரீஃப் என்ற இடங்களுக்கு சென்ற போதும் இரண்டு விதமான தாலிபான்களைப் பற்றி கூறினார்கள். ஆ. தாலிபான்கள் இந்திய எதிரிகள் அல்ல, ஆனால் பா. தாலிபான்கள் இந்திய எதிரிகள்.

செல்லபுரம் வள்ளியம்மை :தங்களின் அனுபவ ஆதார தகவல்கள் மிகவும் பயனுள்ளளவை  
பாகிஸ்தான் தலிபான்கள் பற்றிய செய்திகளை வழமை போல இந்திய ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன
ஆப்கான் மக்களின் கிளப் ஹவுஸ் விவாதங்களை கேட்கும் பொழுது மிகவும் அதிர்ச்சியான பல செய்திகள் வருகின்றன .. இப்பகுதி தாலிபான்களும் மிகப்பெரும் பின்னணி பலம் உள்ளவர்கள் .
வரும் நாட்கள் நிம்மதியாக இருக்க போவதில்லை .. இதன் தாக்கம் காஷ்மீரையும் தாண்டி  இதர இடங்களிலும் எதிரொலிக்கும் சாத்தியம் உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக