செவ்வாய், 15 ஜூன், 2021

தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி விற்பனைக்கு வருமா?

  Hemavandhana - tamil.oneindia.com :   சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி விற்பனை வர போகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. காரணம், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜனை, லாட்டரி அதிபர் மார்ட்டின் சந்தித்து பேசியதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. டாஸ்மாக் எப்படி அரசுக்கு நிதி வருவாயை பெருக்க உதவுகிறதோ, அதுபோலவே லாட்டரி விற்பனையும் பெருமளவு நிதியை தமிழக கஜானாவுக்கு வாரி தரும்
குடிமகன்களுக்கு டாஸ்மாக் ஒரு போதை என்றால், பலருக்கு இந்த லாட்டரியும் ஒரு போதையாக இருந்தது.. பலர் பித்து பிடித்து போயிருந்தனர்.
விமர்சனம் எத்தனையோ குடும்பங்கள் இதனால் நடுத்தெருவுக்கு வந்தன.. எத்தனையோ உயிர்கள் தற்கொலை செய்து கொண்டன. ஒருகட்டத்தில் நிறைய விமர்சனங்கள் எழுந்ததால், இந்த லாட்டரி சீட்டு திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது.. இப்படிப்பட்ட சூழலில், சமீபத்தில் ஒருநாள் திடீரென கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி தந்திருந்தார்..



நிதி வருவாய் அதில், "தமிழகத்தில் நிதி வருவாயை பெருக்குவதற்கு தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்க வேண்டும், லாட்டரி சீட்டை அரசே ஏற்று நடத்த வேண்டும்... லாட்டரி சீட்டு நடத்துவதால் பல குடும்பங்கள் சீரழிகின்றன என்று விவாதங்கள் வரும்... ஆனால் ஆதார் கார்டு வைத்துக்கொண்டு ஒருவருக்கு 10 டிக்கெட் மட்டுமே என்று வரைமுறைப்படுத்த வேண்டும்... இதனை விவாதித்து முடிவு எடுக்கலாம்... விவாதம் நடத்தினால் தான் எதற்கும் தீர்வு கிடைக்கும்... புதுபுது உத்திகளை கையாண்டால் மட்டுமே வருவாயை பெருக்க முடியும்" என்று கூறியிருந்தார்

கார்த்தி சிதம்பரம் கார்த்தி சிதம்பரம் இப்படி சொன்னதுமே பலரும் சிரித்தனர்.. யாருமே இதை சீரியஸாக எடுத்து கொள்ளவில்லை.. ஆனால், அன்று கார்த்தி சொன்னதைதான் இன்று தமிழக அரசு கையில் எடுத்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.. இதற்கு காரணம், லாட்டரி அதிபர் மார்ட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது
நிதியமைச்சர் இது எதற்கான சந்திப்பு என்று உறுதியாக தெரியவில்லை.. அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.. ஆனாலும், ஒரு நிதியமைச்சரை மார்ட்டின் ஏன் சென்று சந்திக்க வேண்டும் என்ற கேள்வி மட்டும் எழுகிறது.. மார்ட்டினை பொறுத்தவரை ஒரு பிசினஸ்மேன்... லாட்டரி சீட்டு விற்றே கோடி கோடியாக சம்பாதித்தவர்.. ஜெயலலிதா, கருணாநிதி என ஆட்சி மாறினாலும் அவர்களுக்கு தன்னுடைய ஆதரவை உடனே தெரிவிப்பவர்

அதிமுக - திமுக அதிமுக - திமுக அதிமுக, திமுக, பாஜக என்று பல கட்சிகளிடம் செல்வாக்கை வைத்திருப்பவர். அதனால்தானோ என்னவோ, தமிழகத்தில் சட்டப்பூர்வ லாட்டரி தடைசெய்யப்பட்டிருந்தாலும்கூட, ஆங்காங்கே சட்டவிரோத லாட்டரி விற்பனை இன்றும் நடப்பதாகவும், இதற்கு மார்ட்டின்தான் காரணம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, அசாம், மேற்கு வங்கம், சிக்கிம், போன்ற நாட்டின் பல மாநிலங்களில் லாட்டரியில் ஃபேமஸ் ஆனவர் மார்ட்டின்.. எந்த அளவுக்கு பணத்தை ஈட்டினாரோ, அந்த அளவுக்கு பலமாநிலங்களில் கோர்ட், கேஸ்களை சந்தித்தார் என்பது வேறு விஷயம்.

இவர் அமைச்சர் பிடிஆரை சந்தித்து பேசியதாக தகவல்கள் வருவதால், ஒருவேளை மறுபடியும் லாட்டரியை தொடங்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது... அமைச்சரை சந்தித்து பேசியதை வைத்து பார்த்தால், தனியார் கையில் லாட்டரி சென்றுவிடுமா? அல்லது கார்த்தி சிதம்பரம் சொன்னதைபால, தமிழ்நாடு அரசே லாட்டரியை எடுத்து நடத்துமா என்று தெரியவில்லை.. ஆனால், லாட்டரி விஷயத்தில் அரசு ஒரு பரிசீலனையில் இருப்பதாகவே யூகிக்கப்படுகிறது..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக