செவ்வாய், 15 ஜூன், 2021

இட ஒதுக்கீடு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டது.!

May be an image of Kandasamy Mariyappan, beard and eyeglasses

Kandasamy Mariyappan  :  இடஒதிக்கீடு நெறிமுறை படுத்தப்பட வேண்டும் என்று நான் கூறியதை பல நண்பர்கள் தவறு என்று கூறுகின்றனர்.!
கண்டிப்பாக அவர்கள் பக்கம் நியாயம் இருக்க வேண்டும்.! அதனால்தான் இவ்வளவு ஆணித்தரமாக மறுக்கின்றனர்.!
ஒருவேளை அவர்கள் கூறுவது போன்று அதனை சரி என்று பார்த்தாலும், எதிர்காலத்தில் இது ஒரு ஆபத்தாகத்தான் இருக்கும் என்பதுதான் எனது பார்வை.!
காரணம் இட ஒதுக்கீடு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டது.! அதனை நமது அரசுகள் நீட்டித்துக் கொண்டே வந்தது.! இதனால் பொதுப் பட்டியலில் உள்ளவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்.!
70களுக்கு முன்பு வரையில் அரசு அலுவலகங்கள், கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், மின்துறை, போக்குவரத்து, வங்கி, காப்பீடு, நீதிமன்றம்  மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர்சாதியினரே பணியில் இருந்தனர்.!
இது எப்படி சாத்தியமானது.!
முன்பே பணியில் இருக்கும் உயர்சாதியை சேர்ந்த ஒருவரது உறவினர்களை அல்லது அவரின் நண்பர்கள் அல்லது நண்பர்களின் உறவினர்களை பணிக்கு அமர்த்துவார். அது ஒரு சங்கிலித் தொடராக இருக்கும்.!
இதனை 70களுக்குப் பிறகு நமது ஆட்சியாளர்கள் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தியது மட்டுமல்லாமல் அதனை உறுதி செய்து, வாரியம் மற்றும் TNPSC மூலமாக எல்லா தரப்பு மக்களுக்கும் அந்த பணிகள் கிடைக்க வழி செய்கின்றனர்.!


1980 வரையிலும் சில பணிகளுக்கு தாழ்த்தப்பட்ட பிரிவில் தகுதியான ஆட்கள் இல்லாததால் அந்த இடங்களை BC அல்லது OCயில் உள்ளவர்களே எடுத்துக் கொள்வார்கள்.! பிறகு மற்ற மாவட்டங்களில் இருந்து அந்த இடங்கள் நிரப்பப்பட்டு வந்தன.! இருந்தாலும் சில குளறுபடிகள் தொடர்ந்ததால் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான இடங்கள் அவர்களே வந்து நிறப்பும்வரை அந்த இடம் காலியாக இருக்க வேண்டும் என்று சட்டம் வகுத்தனர்.! அதற்குப் பிறகு முழுவதுமாக அந்தந்தப் பிரிவினருக்கு, அந்த இடங்கள் கிடைக்க வழிவகை செய்தது.!
மற்றொருபுறம் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற கல்விகளிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிக இடங்களை எடுத்துக் கொள்ள முடிந்தது.!
எப்படி.!
80களுக்கு முன்பு கவனித்தீர்கள் என்றால்... எனது பையன் Distinctionல் (80%), First Classல் (60%), 2nd Classல் (50%), Pass பண்டிட்டான் என்பார்கள்.! போட்டி அதிகம் இல்லாமல் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற கல்விகளில் சேர்ந்தனர்.!
ஆனால் 2000க்குப் பிறகு பல மாணவர்களும் படிக்க வந்ததால் 95% மேல் 50,000 மாணவர்கள் இருப்பார்கள்.!
உண்மையில் பொதுப்பட்டியலில் உள்ளவர்களால் போட்டி போட முடியவில்லை.! இதுதான் உண்மை.!
எனவே அவர்கள் எடுத்த ஆயுதம்தான், இடஒதுக்கீட்டில் வருவதால் தரம் இல்லை, மனப்பாடம் செய்து படிக்கின்றனர், சமச்சீர் கல்வி போன்று ஒரு கேவலமான கல்வித் திட்டம் உலகத்திலேயே இல்லை, CBSC, ICSC பாடத்திட்டம் மட்டுமே நாட்டை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லும்.! அமெரிக்க, ஐரோப்பிய மாணவர்களை பாருங்கள் என்று கூப்பாடு போட்டனர்.!
அடுத்த ஆயுதம் போட்டி தேர்வு.! பாருங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களால் NEET, JEE, UPSC தேர்வுகளை எதிர் கொள்ள முடியவில்லை, IIT, IIM எல்லாம் ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், பிஹார் மாநில மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டை வைக்க ஆரம்பித்தனர்.!
இது உண்மையோ என்று நமது பிள்ளைகளை CBSC பாடத்திட்டத்தில் சேர்த்து படிக்க வைத்தால் அப்படியும் அதிகமாக மதிப்பெண் எடுக்கவில்லை.! ஏன் என்று கேட்டால்... நீங்கள் FIITJEE, AKASH, KOTA போன்ற கோச்சிங் சென்டரில் சேர்த்து விட்டால்தான் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள் என்றனர். சரி என்று இரண்டு ஆண்டுகளுக்கு சேர்த்து விட்டு... அப்படியும் மதிப்பெண் எடுக்கவில்லையே என்றால்... இல்லை நீங்கள் 6வது முதலே சேர்த்து விட வேண்டும்.!
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரையில் FIITJEEயில் படிக்கும் அதிக மாணவர்கள் நிறைய மதிப்பெண் எடுக்கிறார்களே என்று எனது மகனை, இரண்டு ஆண்டுகளுக்கு 4 லட்சம் கட்டி சேர்த்து விட்டால்...
பையனுக்கு போக விருப்பம் இல்லாமல் நாங்கள் திட்டுவோமோ என்று பயந்து கொண்டு ஒரு வருடத்திற்கு சென்றான். ஒரு நாள் Parents meeting பொழுதுதான் தெரிந்தது, படு கேவலமான Lecturers from Andra, Bihar, UP.
போக வேண்டாம் என்று நிறுத்தி விட்டோம்.
பணமா..!? நரி தின்ற கோழிதான்.!
கோச்சிங் முக்கியமில்லை, எந்த கோச்சிங் சென்டரில் சேர்த்து படிக்க வைக்கிறீர்கள் என்பதும் முக்கியம் என்று கடைசியில் தான் தெரிந்தது.!
முன்பு FIITJEE என்றால், இப்போது KOTA, AKASH, BYJU கோச்சிங் சென்டரில் படிப்பவர்கள் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் எடுக்கின்றனர்.!
அப்படியென்றால்....!!??
உண்மையில் இதனை நிர்ணயிப்பவர்கள் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள். அதற்கு மிகப்பெரிய Lobby இருக்கிறது.!
இவர்கள் இடஒதுக்கீடு தொடர அனுமதிக்க மாட்டார்கள்.!
மேலும் மின்துறை, போக்குவரத்து, வங்கி, காப்பீடு போன்ற நிறுவனங்கள் தனியார் வசம் செல்கிறது.! ஏற்கனவே தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது.!
சில தனியார் நிறுவனங்களில், கீழ் நிலையில் உள்ள பணியாளர்கள் தவிர்த்து Supervisor, Production Engineer, Quality control Manager, Logistics Managers போன்றவர்கள் குறிப்பிட்ட உயர் சாதியில் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவரே இருப்பார்.!
இதனால்தான் இடஒதுக்கீடு மட்டுமே இதற்கான தீர்வு என்கிறோம் என்று சொல்லத் தோன்றும்.!
ஆனால் அவர்கள் விட மாட்டார்கள், இடஒதுக்கீட்டை நீக்கி விடுவார்கள்..!
இடஒதுக்கீட்டை நீக்கினால் போராடுவோம் என்று கூறலாம். 200 நாட்களாக விவசாயிகள் போராடுகின்றனர். அரசு கண்டுகொள்ளவே இல்லை.!
1973ல், மத்திய கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில்  பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து மண்டல் கமிசன் அறிக்கை சமர்ப்பித்தனர்.! எந்த முன்னேற்றமும் இல்லை. 1990ல் நிறைவேற்றப்பட்டு, 1993ல் சட்டமாக்கப்பட்டு, 2017ல் உச்சநீதிமன்றம் எச்சரித்து... இன்று வரையிலும் முறையாக பயன்படுத்தப் படவில்லை.!
ஆனால் EWS 10% முறையை 30 நாட்களில் சட்டமாக்கி நடைமுறைப்படுத்தி விட்டனர்.! எப்படி, ஏன்.!?
உண்மையில் EWS என்ற இடஒதுக்கீடு மூலமாக குட்டையை குழப்பி மொத்த இடஒதுக்கீட்டையே காலி செய்ய பார்த்தனர். ஆனால் நடக்கவில்லை, அவர்களும் சரி நமக்கு பயனளிக்கிறது என்று ஆறப் போட்டுள்ளனர்.
மத்திய அரசின் C, D Category பணியிடங்கள் அந்தந்த மாநில மக்களை வைத்து நிரப்ப வேண்டும் என்ற நிலையில், வடக்கத்தியர்களை தமிழ்நாட்டில் பணியமர்த்துகின்றனரே எப்படி..!? இதை வடக்கின் சமூக நீதி காவலர் திரு. லாலு பிரசாத் அமைச்சராக இருந்த பொழுதுதான் ஆரம்பித்தனர். திமுக மத்திய அரசில் அங்கம் வகித்த பொழுதுதான் NEETஐ நடைமுறைப் படுத்தினர்!
நாம் இந்த ஆதிக்க சாக்திகளை எதிர்த்து பேசினால்..., நாங்கள் செய்யவில்லை, காங்கிரஸ், லாலு, கருணாநிதிதான் செய்தனர் என்பார்கள்.!
எனவே போட்டிகளை எதிர் கொள்ள நமது மக்களை தயார் செய்ய வேண்டும்.
அதற்காகத்தான் இடஒதுக்கீட்டை வறைமுறைபடுத்தப்பட வேண்டும் என்கிறேன்.!
இடஒதுக்கீட்டை பயன்படுத்தி அதிகாரத்தின் அருகில் இருப்பவர்கள் ஒரு Lobbyஐ உருவாக்கி தங்களுடைய சமூகத்தின் பாதுகாவலர்களாக இருப்பது மட்டுமல்லாமல் உயர்சாதி Lobby Dominate செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.!
ஏற்கனவே இடஒதுக்கீட்டை பயன்படுத்தி நல்ல நிலையில் உள்ளவர்கள், நகரங்களில் உள்ளவர்கள் மீண்டும் இடஒதுக்கீட்டை பயன்படுத்தாமல் அதே வகுப்பைச் சேர்ந்த மற்றவர்களுக்கு, எங்கோ குக்கிராமத்தில் இருப்பவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் அல்லது அரசே மறுக்க வேண்டும் என்கிறேன்.!
அது எப்படி நடக்கும்.! இது பொருளாதார இடஒதுக்கீடு போன்று இருக்கிறது, நீங்கள் கிரீமிலேயர் பற்றி பேசுகிறீர்கள் என்றால்...
இது, இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி நகரங்களில் வாழும் கூட்டமைப்பினரின் சதியோ என்று எண்ணத் தோன்றும்..!
இடஒதுக்கீட்டின் பலனை குக்கிராமத்தில் இருப்பவர்களும் பயன்படுத்தக் கூடாது என்ற சிந்தனையோ என்று எண்ணத் தோன்றும்.!
கடைசியாக
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவில் உள்ள வசதி படைத்தவர்கள் பல தொழில் நிறுவனங்களை தொடங்க வேண்டும். அங்கே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்கிறேன்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக