செவ்வாய், 15 ஜூன், 2021

ஆர்எஸ்எஸ் துணை அமைப்பின் விழாவில் திமுக அமைச்சர்கள் கலந்து கொள்ளலாமா?

May be an image of one or more people, people standing and text that says 'Venkat Prabu @venkateshprab.. ஆர் எஸ் எஸ் ஸின் தென்பாரத சேவாசங்க அமைப்பின் சார்பில் நடந்த விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு திமுக எம்எல்ஏ செல்வராஜ் மற்றும் தென்பாரத சேவாசங்க அமைப்பாளர் .பத்மகுமார் ஆகியோர் கலந்து கொண் விழாவை சிறப்பித்தனர் பாரத்ஹார்ட்புல்ளள் மயம்'
Shalin Maria Lawrence : தங்களின் உரிமைகளை நியாயமாக கேட்கும் பட்டியல் இன மக்களை சங்கிகள் என்று அவதூறாக தொடர்ச்சியாக பேசிவிட்டு இப்படி ஆர்எஸ்எஸ் நிகழ்வில் அரசின் சார்பில் கலந்து கொள்வது எந்த விதத்தில் நியாயம்? ஆரியர்களின் பாரதமாதா தமிழ்நாட்டை காலில் போட்டு மிதித்து கொண்டிருக்கிறார் அது கூட புரியாமல் ஆதிதிராவிட அமைச்சர் படத்திற்கு சூடம் ஏற்றுகிறார். முடிந்தால் சனாதனம் என்றால் என்னவென்றும் திராவிடம் என்றால் என்னவென்றும் இந்த மூன்று எம்எல்ஏக்களுக்கு கட்சி சொல்லி கொடுக்கட்டும்.

Bilal Aliyar  :    ஆர்எஸ்எஸ் அமைப்பின், அதன துணை அமைப்பின்  விழாக்களில், அரசின் சார்பில் அமைச்சர்கள் கலந்து கொள்ளலாமா?
தமிழ்நாடு அரசும், அமைச்சர்களும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மக்களுக்கும், அனைத்து தரப்பினருக்குமானதே.
சேவாபாரதி போன்ற அமைப்புகள் உள் நோக்கம் கொண்டவையாக இருந்த போதிலும், மக்கள் சேவை என்ற ஒரு அடையாளத்தில் அமைச்சர்களை அணுகும் போது அவை மறுக்கப்படக்கூடாது. கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.


ஆனால் அங்கு சென்ற பிறகு நாம் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதே இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. அது குறித்து பேசும்போது ஒரு வரலாற்று சம்பவத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்  


கலைஞர் இந்துத்துவ பார்வைக்கும், இந்துத்துவ சக்திகளுக்கும் எதிராக செயல்படுகிறார், ஆகவே கலைஞரை கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து பகவத்கீதையை நேரில் வழங்கி படிக்க சொல்ல போகிறேன் என அறிவிக்கிறார் இந்து முண்ணனி ராமகோபாலன். கலைஞரை சந்திக்க ராமகோபாலன் கோபாலபுரம் வருகிறார் என்ற செய்தி அறிந்தவுடன் காவல்துறையினரும், ஊடகத்தினரும் பரபரப்படைகின்றனர். காலம் முழுவதும் தான் எதிர்க்கும், சனாதன இந்துத்துவத்தை ஆதரிக்கும், திராவிடத்தை  நேரடியாக எதிர்க்கும் ஒருவர் கலைஞரை சந்தித்தால் என்ன நேருமோ என்ற பதட்டமும் அனைவரையும் தொற்றிக்கொண்டது.  


அந்த நேரமும் வந்தது, ராமகோபாலன் கோபாலபுரம் வீட்டிற்கு வந்தவுடன் கலைஞர் அவரை வரவேற்கிறார். ராமகோபாலன் தன் கையில் இருந்த பகவத்கீதையை கலைஞருக்கு அளிக்கிறார்.
கலைஞர் மறுப்பேதும் சொல்லாமல் அதை வாங்கி கொண்டு, வந்தவரை திரும்பி அனுப்பக் கூடாதென, திக தலைவர் ஆசிரியர் ஐயா கி. வீரமணி எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற புத்தகத்தை ராமகோபாலனுக்கு வழங்குகிறார். பகவத்கீதையை கலைஞருக்கு வழங்க வந்த இடத்தில் பகவத்கீதையை நேரடியாக விமர்சித்த கீதையின் மறுபக்கத்தை வாங்கி சென்றார் ராமகோபாலன்.

இம்மாதிரி தன் சித்தாந்தத்தை வலுவாமல் பின்பற்றிய தலைவனின் திராவிட இயக்க அமைச்சர்கள் சேவாபாரதியின் கூட்டத்தில் கலந்து கொண்டு, சமத்துவம், சமூகநீதி, மத்தல்லிணக்கம், சாதியத்தின் கூறுகளை குறித்து ஓரிரண்டு நிமிடங்கள் பேசியிருக்கலாம். ஏனெனில் திராவிட சித்தாந்த எதிர்ப்பு இடங்களில் அது குறித்து பேசும் வாய்ப்பு தானாக அமையும் போது அதை பயன்படுத்தியிருக்க வேண்டும். அம்மாதிரி எதுவுமே நடைபெறாததும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை போற்றும் நிகழ்ச்சியாகவே அது நடந்திருக்கிறது.…
ஏமாற்றமே மிஞ்சியது….. Sorry Honorable Mr. Vellakkivil Swamynathan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக