ஞாயிறு, 20 ஜூன், 2021

உயிர்காத்த தமிழ்நாடு அரசின் ஊரடங்கும்.. ஊழலுக்கான எடப்பாடி அரசின் ஊரடங்கும்!

 Devi Somasundaram  :   ஊழலுக்கான அதிமுகவின் ஊரடங்கும், உயிர்காத்த திமுகவின் ஊரடங்கும்.
மொத்தத்தில் 5000 தினசரி பாதிப்புகள் ஏற்படாத முதல் அலையில்,  எந்த ஆலோசனையும், முன்னேற்பாடும் இல்லாமல்  
 ஏறத்தாழ 6 மாத காலம் ஊரடங்கு என்ற பெயரில் தொழில்களை அழித்து, மக்களில் வாழ்வாதாரத்தை முடக்கி, பெருளாதாரதைச் சீரழித்தது அடிமை அதிமுக அரசு.
 அடிமை அதிமுக அரசு முரட்டுத் தனமாக அமல்படுத்திய ஊரடங்கில், அப்பாவி மக்கள், வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பு மக்களுமே காவல்துறையால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர், சாத்தான் குளம் கொலை போன்ற குரூரங்களும் நிகழ்ந்தன. அப்பாவிகளின் வாகனங்கள், உடைமைகள் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டன, சிதைக்கப்பட்டன...
 ஆனால் அந்த ஆறு மாத ஊரடங்கு காலத்தில், மருத்துவக் கட்டமைப்பு வலுவாக்கப் பட்டதா? உயிர்காக்கும் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப் பட்டதா? இல்லை ஐசியூ படுக்கைகள் உருவாக்கப்பட்டனவா? வெண்டிலேட்டர்கள் அதிகரிக்கப்பட்டனவா? மருந்துகள் உற்பத்தி, கொள்முதலுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா? இல்லை... இல்லவே இல்லை, பின்னர் என்னதான் செய்தனர் அடிமை அதிமுகவினர்?


 கொரோனா பேரிடர் காலம் என்று கூடப் பாராமல், தெருக்களில் தகரம் அடைப்பது தொடங்கி நோயாளிகளுக்கான உணவு, தனியார் மருத்துவமனைக் கட்டணக் கொள்ளை, உயிர் காக்கும் மருந்துகள் பதுக்கல்,  மின் கட்டணக் கொள்ளை, ஏழை மாணவர்களின் சத்துணவுப் பருப்பு கொள்முதல் எனக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் ஊழல் செய்து ஊரை அடித்து உலையில் போடுவதிலேயே குறியாக இருந்தனர் அடிமை அதிமுகவினர்.
 கலைஞரின் 20 ஆண்டு பொற்கால ஆட்சிக் காலத்தில், தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட தலைசிறந்த உட்கட்டமைப்பு -  சாலைகள், பாலங்கள், மின்சாரம், குடிநீர் - மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், பல்கலைக் கழகங்கள், நூலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் எல்லாம் இருந்தும், அவற்றினை முறையாகப் பயன்படுத்தி, கொரோனாப் பேரிடரில் இருந்து மக்களைக் காக்க உழைக்காமல், கண்ணும் கருத்துமாய் ஊழல் செய்வதிலேயே குறியாக இருந்தனர் அதிமுகவினர்.
 ஆனால் பத்தாண்டு காலம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட திமுகவினர் சொந்தக் காசைப் போட்டு, மக்களுக்குத் தேவையான உணவு, அரிசி,ப் பருப்பு, பணம், மருந்து, மாத்திரை என அனைத்தையும் வழங்கினர். தமிழ்நாடு முழுவதும் “ஒன்றிணைவோம் வா” முன்னெடுப்பு, தமிழ்நாட்டு மக்களைப் பசி, பட்டினியில் இருந்து காப்பாற்றியது.
 “ஒன்றிணைவோம் வா” என்னும் ஒரு மாபெரும் மனிதநேய சேவையைத் தனிப்பட்ட ஒரு கட்சி முன்னெடுத்து, இத்தனை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது மகத்தான சாதனை. அந்த நேரத்திலும் ஆளுங்கட்சியான அடிமை அதிமுக எந்தப் பொறுப்பும் இல்லாமல், எதிர்க்கட்சியான திமுகவைக் குறை கூறிக் கொண்டும், விமர்சித்துக் கொண்டும் இருந்ததே ஒழிய, ஊழலைத் தவிர வேறெதையும் உருப்படியாய்ச் செய்யவில்லை.
 எட்ப்பாடி பழனிசாமி, ”கொரோனா பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் நோய்”, ”70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா வரும்”, ”கொரோனா ஏழைகளுக்கு வராது”, ”உழைத்து வேலை செய்பவர்களுக்கு கொரோனா வராது”, ”கொரோனா எப்போது போகும் என கடவுளுக்குத்தான் தெரியும்”, ”எதிர்க்கட்சியினர் என்ன மருத்துவர்களா?” என்றெல்லாம் ஏகடியம் பேசிக் கொண்டே, எட்டுத் திக்கிலும் ஊழல் செய்து கொண்டிருந்தாரே ஒழிய, எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 அடிமை அதிமுக அரசுதான் இப்படி என்றால், ஒன்றிய பாஜக அரசோ “விளக்கேற்று”, “கை தட்டு”, ”கோ கொரோனா கோ... சொல்லு”, ”கோமியம் குடி”, ”மாட்டுச் சாணம் பூசு” என்கிற ரீதியில், கொஞ்சங்கூட அறிவிற்கும், அறிவியலுக்கும் தொடர்பில்லாத பாதையில் பயணித்து கொரோனாவிற்கு சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது... பாஜக சொல்வதைக் கண்னைமூடிக் கொண்டு செய்தது அடிமை அதிமுக அரசு.
 கடைசியில் அடிமை அதிமுகவினர் ஆட்சியை வெளியேறிய போது, தமிழ்நாட்டின் தினசரித் தொற்று ஏறக்குறைய 30,000 என்ற மிக மிக மோசமான நிலை. நிதி நிலை படு மோசம். இப்படிப்பட்ட வரலாற்றில் தமிழகம் சந்தித்திராத மாபெரும் இக்கட்டான நிலையில் தமிழக முதல்வரானார் ஸ்டாலின்.
 ஸ்டாலின் பதவியேற்ற நாற்பதே நாட்களில்,
 கொரோனா தினசரித் தொற்று 36,000ல் இருந்து 8,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
 ஆக்சிஜன் படுக்கைகள் புதிதாக 50,000 உருவாக்கப்பட்டுள்ளன,
 சாதாரண படுக்கைகள் லட்சத்திற்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளன,
 ஆக்சிஜன் கையிருப்பு பல மடங்கு அதிகக்கப் பட்டுள்ளது,
 75 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,
 தனியார் மருத்துவமைகளில் அரசு காப்பீட்டுத் திட்டம் மூலம் இலவச கொரோனா சிகிச்சை
 வெறும் முப்பதே நாட்கள் ஊரடங்கு மட்டுமே, அதுவும் பொதுமக்களைத் துன்புறுத்தாத முறையில் மிகவும் சாந்தமான அனுகுமுறையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக