ஞாயிறு, 20 ஜூன், 2021

தமிழ்நாட்டில் புலிகளின் ஆதரவு தளம் காணாமல் போனது எப்படி? டான் அசோக்.. காணொளி!

Raja Rajendran Tamilnadu   :  டான் Ashok R வழங்கியுள்ள இந்தப் பேட்டியை முழுமையாகப் பாருங்கள்.  
இரு தரப்பினரும் பார்க்கலாம்.  அதாவது அரக்கர்களின் ஹேட்டர்ஸ் & ஃபேன்ஸ்களைச் சொல்கிறேன் !
நெறியாளர் லண்டன் புலி ஆதரவு தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்.  
எனவே அவர் நிலைப்பாடு, பதட்டம் பற்றி குறை சொல்லப் போவதில்லை !
ஆனால், டான் அசோக்கை குற்றவாளியாக்கி, திமுக அவரைக் கை கழுவிவிட வேண்டுமென எவ்வளவு மெனக்கிடுகிறார் பாருங்கள் ?
அங்குதான் இவர்களைப் பரிதாபமாகப் பார்க்கிறேன் !
விடுதலைப் புலிகளை விமர்சித்தால் அவன் சுப்ரமணிய சாமி & எச். ராஜாவின் ஆள் என்று முத்திரைக் குத்துவதில் இருக்கும் வெறியை, இத்தனை வருடங்கள் இங்கு மக்கள் மனத்திலிருந்து அகன்று போய்விட்ட புலிகள் பிம்பத்தை மீள் உருவாக்க முயன்றிருக்கலாம் !
மாறாக, திமுகதான் புலிகளின் எதிரிகள் என்றே 2009 முதல் வெறிகொண்டு கட்டமைத்தார்கள்!
மத்தளமாகப் பிறந்தால் இரண்டு பக்கமும் அடி என்பது போல, 1991 ல் விடுதலைப் புலிகளின் நண்பர்கள் என்று கடும் தண்டனை.  
18 வருடத்திற்குள் அப்படியே தலைகீழாய் புலிகளின் எதிரிகள் என்றும் கடும் தண்டனை.


இரண்டையும் செய்தது ஒரே ஆட்கள். யார்?  ஈழத்தமிழர்களா ?  இல்லை.  இந்தியத் தமிழர்கள்!
ராஜிவைக் கொன்றவர்கள் நாங்களில்லை எனக் கதறி, ஆட்சியையும், சொத்துக்களையும் பறிகொடுத்தும், ஜெயாவின் காட்

டுத்தன ஆட்சியால்தான் ஐந்து வருடங்கள் கழித்து மக்கள் திமுகவைப் புரிந்துக் கொண்டார்கள் !
ஆனால் பின் அதே மக்கள்தான் விடுதலைப் புலிகளுக்கு உதவாமல் போலி உண்ணாவிரதமிருந்தார், ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை கொன்றார் என்றபோதும் நம்பித் தொலைத்தார்கள் !
அதனால்தான், இனி புலிகளைச் சுமப்பதில்லை என்கிற முடிவுக்கு திமுக அனுதாபிகள் பலர் வந்தனர்.  திமுக முடிவில்லை !
திமுக அரசியல் கட்சி.  இன்று ஆளுங்கட்சி.  நம்மிஷ்டத்துக்கு அது என்றுமே முடிவெடுக்காது.  பெரும்பாலான மக்களின் எண்ணத்திற்கேற்பவே அது நடக்கும்.  நடக்கப் போவதை முன் கூட்டியே சொல்லியுமிருக்கும் !
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்னும் வார்த்தையை சீமான் உதிர்த்திருந்தாலும் இன்று திமுகவிடம் நெருக்கமாக உள்ள பல தோழமை கட்சிகளும், மக்கள் இயக்கங்களும் அன்று சீமானுக்குப் பின் வரிசையில் ஜெயலலிதா வாசலில்தான் நின்றார்கள் !
ஜெயலலிதாவோ புலிகளை முற்றிலுமாகத் தடை செய்த தமிழ்நாட்டை ஆள வந்தவர்.  பிரபாகரனை கைது செய்து இந்தியாவில் தூக்கிலிட வேண்டுமென சட்டசபையில் முழங்கியவர்.  நீங்கள் இன்றுவரை வெறுக்கும் காங்கிரசுடன் தொடர்ந்து பல வருடங்கள் கூட்டணியில் இருந்தவர் !
த மா காவை கணக்கில் கொள்ளாவிட்டால் திமுக,  காங்கிரசுடன் கூட்டணி வைக்க 13 வருடங்கள் இடைவெளி தேவைப்பட்டன.  களக் காட்சிகள் மாறியுமிருந்தன.  தூக்குத் தண்டனைகள் ஆயுளாக குறைக்கப்பட்டன.  விடுதலைக் கோஷங்களும் பின்னாட்களில் எழ அதுவே காரணம் !
ஆனால் ஜெயலலிதாவை  ஈழத்தாயாக்கி, திமுகவை பேயாக்கியக் கூட்டம் எது ?
அந்தக் கூட்டம்தான் புலிகளை கைவிடாதே, ஈழ விடுதலைப் போராளிகளை பயங்கரவாத அமைப்பு எனாதே எனக் கதறுகிறது !
வாழ்க்கை ஒரு சக்கரம். சுழன்றுக்கொண்டே இருக்கும்.  தனக்கடியில் வைத்து அது திமுகைவை நசுக்கியபோது, மேலிருந்து கெக்கலித்தவர்கள், இன்று சக்கரத்துக்கு அடியில்  நசுங்கும்போது எழுகிறது ஓலம் !
நெறியாளர் நடேசனின் கதறலும் அதற்குச் சளைக்காதது.  
ஈழத்தமிழர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்.  நீங்கள் அவர்கள் பக்கம் நிற்காமல் .....
எப்பா சாமி, நாங்க எப்பவுமே ஈழத்தமிழர்களின் ஆதரவாளர்கள்தான்.  அவர்களின் விடுதலைக்கான எங்களின் குரல் என்றும் ஒலிப்பதுதான்.  ஆனால் போருக்குப் பின்னான இந்தப் பத்தாண்டுகளில், முடிந்துபோன இயக்கத்தின் குறைகளைப் பேசினால், நீங்கள் ஏன் பதட்டம் கொள்கிறீர்கள் ? என்றார் அசோக் !
போர் முடிந்து விட்டதென்றால் இனப்படுகொலைகள் முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்கிறீர்களா ?
அப்படிச் சொல்லவில்லை.  எனக்கு அதுபற்றி தெரியாது.  ஏனெனில் நீங்களும், நானும் அங்கில்லை !
இல்லை.  எனக்குத் தெரியும்.  அங்கு இனப்படுகொலைகள் இன்றும் நடந்துக் கொண்டுதானுள்ளன !
என்ன ?  இன்றுமா ?? (அசோக் அதிர்ச்சி அடைகிறார்) அப்ப நாம அதைப் பற்றியில்ல பேசியிருக்கணும் ?  வெட்டியா கண்டத பேசிக்கிட்டு இருக்கோம் ?  வாங்க.    இப்பவே இதுபற்றி நடேசன் சொன்னாருன்னு எல்லார்கிட்டயும் சொல்லி பேச வைப்போம் !
நடேசன் முகம் வெளிறிப் போகிறது.  உடல்மொழியில் சன்னமான நடுக்கம்.  பதட்டக் குரலில் இல்லையில்லை நான் சொல்லவில்லை.
அசோக் கடைவாயில் ஒரு நையாண்டி புன்னகை.  சரி, நீங்கள் சொல்லவில்லை.  நடேசனுக்கு வந்த சேதி படி.....
இல்லை இல்லை.  நடப்பதாகச் சொல்லி சிலர் என்று அவசர அவசரமாக அந்த வரியிலிருந்து தாவ எத்தனிக்கிறார் !
சரி.  இறுதியாக நீங்கள் கூற விரும்புவது ;
பிரபாகரன் எங்களுக்குத் தேவையில்லை இது என்னைப் போன்ற சிலரின் தனிப்பட்ட கருத்து.
இதற்கு நெறியாளர் நடேசன் சரேலென்று, அதேபோல் எங்களுக்கு பெரியார் தேவையில்லை என்றும் எங்களவர்கள் சிலர் சொல்கிறார்கள் என்றார் !
ஆக, இவர்கள் பிரபாகரனுக்கு நிகராக பெரியாரையோ, அண்ணாவையோ, கலைஞரையோ நிறுவவே விழைகிறார்கள்.  தவறு.  நிகராக அல்ல.  உயர்வாக.  அதாவது உனக்கு பிரபாகரன் வேண்டாமா, எனக்கு பெரியார் வேண்டாம் !
போய்க்கோ.  யாருக்கு நட்டம் ?  எங்களுக்கா ??
உலக பொது அறிவு கொண்ட எவரை வைத்தும் ஒரு விவாதம் நடத்துவோம்.  
தமிழ்ச் சமூகத்திற்கு பெரியார் தேவையா - பிரபாகரன் தேவையா ?
பெரியார் சாதித்தது என்ன ?
பிரபாகரன் சாதித்தது என்ன ?
பெரியாரால் இந்தியத் தமிழர்கள் அடைந்தது என்ன ?  இழந்தது என்ன ??
பிரபாகரனால் ஈழத்தமிழர்கள் அடைந்தது என்ன ?  இழந்தது என்ன ??
அவர்கள் அலசி ஆய்ந்து தீர்ப்பு கூறட்டும் !
52 நிமிடப் பேட்டி.  நெறியாளரின் நேர்மையையும், பாண்டேத்தனத்தையும் பார்க்க உதவும்.  மறுமொழி பெட்டியில் இழை காண்க !
- Raja Rajendran Tamilnadu

 

 Arunkumar Dhanaraj  : ராஜிவ் கொலையை சாதாரண தவறாக கடந்து போக சொல்றானுங்க

Narayanaperumal Jayaraman  : Fantastic write up

Thilipkumaar Ganeshan  : ரங்கம்மாவின் அண்ணல் அம்பேத்கர் மீதான அவதூறு புத்தகத்தையும் கொற்றவை , வசுமித்ர கும்பலையும் துதி பாடும் நடேசன் கும்பல் இவ்வாறு பேசுவதில் ஆச்சரியம் கிடையாது.


Thilipkumaar Ganeshan   : Ibc இலங்கையில் அலுவலகம் வைத்துக்கொண்டு இயங்குகிறது.
இன்னமும் இனப்படுகொலை நடக்கும் இலங்கையில், புலி ஆதரவு ஊடகமாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ibc எவ்வாறு எந்தவொரு சிக்கலுமில்லாமல் செயற்பட முடிகிறது????
   
கேப்டன் குமார்  : நெறியாளர் உளரிட்டு இருக்கான் கடைசில கேனத்தனமா ஒரு கேள்வி கேட்க்குறான் டான் அசோக் குறிப்பிட்ட மாதிரி 9/11க்கு பிறகு ஆயுத வழிய விட்ருந்தா நல்லது நடந்து இருக்குமா அப்பவும் கொலை நடந்துச்சுனு வித்யாசமா ஒரு கேள்வி கேட்டான் பாருங்க
விபுகள் ஆயுத வழிய விடவே இல்லையே பொறவு எப்புடி டா நல்லமுடிவு கிடைச்சு இருக்கும்
அப்பறம் விடுதலை புலிகளை எல்லாம் தீவிரவாத இயக்கமா மேற்க்குலக நாடுகள் தான் அடையாள படுத்துனாங்கனு உருட்டு உருட்ருறான் நாம சொல்றது விபுகள் விடுதலை இயக்கங்கள் என்பதை தாண்டி நாடுகடந்த பயங்கரவாத செயல்பாடுகள் கொண்டவர்கள்னு மத்த நாடுகள் முடிவுக்கு காரணமே விபுக்கள் தான் நிறைய நாடுகடந்த கொலைகள் தொடர்ந்து ஈடுபடப்போய் தான் தான் மத்த நாடுகள் நாடுகடந்த தாககுதல்கள்ல ஈடுபடும் வன்முறைகாரர்கள்னு முடிவுக்கு வர வைச்சதே இவங்க தான்
ராஜீவ்
பத்மநாபானு இந்தியாவிலே கணக்கு வழக்கில்லாத கொலைகள் இதைத்தவிற விபுகளுக்கு பயந்து மேற்க்குலக நாடுகளில் தஞ்சம் புகுந்த ஆட்களை அங்கயே வைச்சி அசாலட் பன்ன சம்பவங்களும் தான் முக்கிய காரணம்


குப்புசாமி பூங்காவனம்  :  பார்த்தேன்... ஊடகவியலாளர் திமிர் தனமான பேச்சையும் பார்த்தேன்... புலம்பெயர்ந்த தமிழர்களின் திமுக விரோத போக்கு, அவர்கள் பதிவிடும் இழிவான கருத்துக்கள், தொடர்ந்து போலி தமிழ் தேசிய அமைப்புகளுக்கு அவர்கள் அளிக்கும் நிதி, வெளிநாடுகளில் அவர்களின் இருப்பை தக்க…வைத்துக்கொள்ள இப்போதும் தீர்வை நோக்கி நகராமல் பிரச்சினைகளை அப்படியே எரிய செய்யும் அவர்கள் மனநிலை, நாங்கள் மட்டும் தாக்கி பேசுவோம், நீங்கள் தடுப்பாட்டம் கூட செய்ய கூடாது எனும் கூற்று என பலவற்றை உடைத்து பேசியிருக்க வேண்டும்

Arivalagan G.  : நடேசன் என்கிற அந்த பத்திரிகையாளர் ஒரு கூலிப்படை தலைவன் போல் பேசுகிறார். அவருடைய உடல் மொழி மிக அருவருப்பாகவும் உள்ளது .அம்பேத்கர் பெரியார் பற்றி பேசும்போது அவருடைய ஏளனம் மிக அருவருப்பாக உள்ளது .லண்டனில் சொகுசு வாழ்க்கை அவரை அப்படி பேச வைத்திருக்கலாம். இனி எந்நாளும் அவர்கள் ஈழத்திற்கு போக போவதே இல்லை .வெட்டி கூட்டம் .தமிழ்நாட்டில் இவர்களுக்கு மயிர் அளவு கூட மரியாதை இல்லை என்பது இன்னும் இவர்களுக்கு புரியவில்லை.
பெரியார் பேரறிஞர் வேண்டாம் "போ.
ஏரி மேல் கோபம்கொண்டால் ஏரிக்கு என்ன நட்டம் உன்.... .....க்குத்தான் நட்டம்."

Venkat Ramanujam  : போய்க்கோ. யாருக்கு நட்டம் ? எங்களுக்கா ??// பெரியார் உதிர்ந்த ரோமத்துக்கு சமனாக முடியுமா .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக