ஞாயிறு, 20 ஜூன், 2021

விஜயதாரணி தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடாவாக தேர்வு

Congress Elects Vijayatharani As Korada | காங்கிரஸ் சட்டமன்ற கொறடாவாக  விஜயதாரணி தேர்வு

Manikandaprabu S - Samayam Tamil  : தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடாவாக விஜயதாரணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை காலை ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடாவாக விஜயதாரணி தேர்வு
துணை கொறடா ஹசன் மௌலானா, செயலாளர் ஆர்.எம்.கருமாணிக்கம், பொருளாளர் ஆர்.ராதாகிருஷ்ணன்
நடந்து முடிந்த சட்டமன்றத் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 25 தொகுதிகளில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அனைத்து கட்சிகளும் சட்டமன்ற குழுத்தலைவரை தேர்ந்தெடுத்த நிலையில், காங்கிரஸ் கட்சி மட்டும் அதனை தேர்வு செய்யாமல் தாமதித்து வந்தது.


சீனியர்கள் என்ற அடிப்படையில், விஜயதாரணி உள்ளிட்ட பலர் அந்த பதவிக்கு போட்டியிட்டதே தாமதத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.

இதனிடையே, ஒருவழியாக காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற குழுத்தலைவராக கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ,வும், துணைத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏவும் சில நாட்களுக்கு முன்னர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடாவாக விஜயதாரணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை காலை ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் கொறடா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

அதேபோல், துணை கொறடா - ஜெ.எம்.ஹெச்.ஹசன் மௌலானா, செயலாளர் - ஆர்.எம்.கருமாணிக்கம், பொருளாளர் - ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான தகவலை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு-விற்கு கே.எஸ்.அழகிரி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக