புதன், 30 ஜூன், 2021

எனக்கு வீடு, வேலைவாய்ப்பு கொடுங்க.. இல்லாட்டி தப்பான வழிக்குத்தான் போவேன்.. சூர்யா பரபரப்பு பேச்சு!

 Vishnupriya R - tamil.oneindia.com  :   சென்னை: எனக்கு வீடு, வேலைவாய்ப்பை கொடுங்கள். இல்லாவிட்டால் நான் தப்பான வழிக்குத்தான் போவேன் என யூடியூபர் ரவுடி பேபி சூர்யா தனது யூடியூப் சேனல் வீடியோவில் பரபரப்பாக பேசியுள்ளார்.
ஆபாசமாக பேசி வருவதால் ரவுடி பேபி சூர்யாவின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது
நான் ஆபாசமாக பேசியதாக எனது சேனலை முடக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து என்னிடம் போலீஸார் விளக்கம் கேட்டுள்ளனர். நான் எல்லாருக்கும் சொல்லி கொள்வது என்னவெனில் எனது யூடியூப் சேனலை முடக்கினால் என் வீடியோவை வைத்து சம்பாதித்த அனைவரின் சேனல்களையும் முடக்க வேண்டும்.



சம்பாதித்த என்னை ஆபாசமாக பேச தூண்டியது யார்? அவர்கள் தூண்டியதால்தான் பேசினேன். என் குழந்தையை கேவலமாக பேசினார்கள், அதனால் நானும் அசிங்கமாக பேசினேன். இதில் என்ன தவறு? நான் தவறான பாதையிலிருந்து தற்போது திருந்தி யூடியூப், ஷார்ட் பிலிம் மூலம் சம்பாதித்து எனது குழந்தைகளை காப்பாற்றி வருகிறேன்.
ஒரு வேளை என் யூடியூப் சேனலை முடக்கினால், நான் என்ன செய்வது , நான் 7ஆம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். பொதுவாக தவறான செயலில் இருந்தவர்களுக்கு அரசாங்கம் மறுவாழ்வு அளிக்கும் வகையில் சுயதொழிலை கற்றுக் கொடுக்கிறது. அது போல் எனக்கு அரசு சார்பில் வீடு, வேலைவாய்ப்பு தர வேண்டும்

இல்லாவிட்டால் நான் தவறான பாதைக்குத்தான் செல்வேன். அப்போது போலீஸார் என் மீது வழக்கு தொடுத்தால் நான் தீக்குளிப்பேன். எனக்கு புருஷன் சரிகிடையாது. நான் யார் குடியையும் கெடுக்கவில்லை, யார் தயவிலும் பிழைக்கவில்லை. எனது வீடியோவை வைத்துதான் நிறைய பேர் பிழைக்கிறார்கள். குழந்தைகளுடன் நடுத்தெருவில் இருந்த போது அதிகாரிகள் எல்லாம் எங்கே போனீங்க?

இப்போது நான் அடக்க ஒடுக்கமாக இருக்கிறேன். எனக்கு இந்த ஒரு முறை வாய்ப்பு தாருங்கள். நான் இனி யூடியூப் சேனலில் ஆபாசமாக பேச மாட்டேன் என ரவுடி பேபி சூர்யா தெரிவித்துள்ளார். இது போல் இவரது யூடியூப் சேனலை முடக்க புகார் கொடுத்த வழக்கறிஞரிடமும் பேச சூர்யா முயற்சி செய்து வருவதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக