தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், முன்னா மற்றும் அவரது கூட்டாளிகள் 13 லாரி ஓட்டுனர்கள் மற்றும் கிளினர்களை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஆந்திர மாநில நீதிமன்றம் முன்னா மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேருக்கு மரணதண்டனை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
செவ்வாய், 25 மே, 2021
13 லாரி டிரைவர்கள்-கிளீனர்கள் கொன்று புதைப்பு; 12 பேருக்கு தூக்கு! ஆந்திரா நெடுஞ்சாலைகளில்,...
nakkeeran : ஆந்திரா மாநில நெடுஞ்சாலைகளில், 2008- 2009 ஆண்டுகளில் பல்வேறு லாரிகள், அதன் ஓட்டுனர்கள் மற்றும் கிளினர்களோடு காணாமல் போயின. அதேபோல் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லாரியும் ஓட்டுநர் மற்றும் கிளினரோடு காணாமல் போனது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அதேபோன்ற மேலும் 4 சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இந்த வழக்குகளில் நடத்தப்பட்ட
விசாரணையின்போது முன்னா என்ற அப்துல் சம்மத் தலைமையில் அவரது கூட்டாளிகள்,
காவல்துறை உடையணிந்து லாரிகளை மறைப்பதும், பிறகு ஆவணங்களை
சரிபார்ப்பது போல் லாரி ஓட்டுநர்களையம், கிளினர்களையும் கொன்றுவிட்டு
பின்னர் லாரிகளை உடைத்து அதன் பாகங்களையும் உதிரிகளையும் விற்றது
தெரியவந்தது. இதனையடுத்து அம்மாநில காவல்துறை முன்னா மற்றும் அவரது
கூட்டாளிகள் அனைவரையும் கைது செய்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக