செவ்வாய், 25 மே, 2021

பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ராஜகோபால் வரதாச்சாரி மீது மேலும் 30 மாணவிகள் புகார்..

Velmurugan P  - tamil.oneindia.com : சென்னை: பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது மாணவிகள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டு கொண்டதுக்கு இணங்க மேலும் 30 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்..
போலீசார் கைது செய்த விசாரணையை தொடங்கிய போது, முதலில் குற்றத்தை மறுத்த ஆசிரியர் ராஜகோபால், சும்மா ஜாலிக்காக மாணவிகளிடம் பேசியதாகவும் ஆனால் அது விபரீதமாகிவிட்டதாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசியராக உள்ளவர் ராஜகோபால், இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரில் ராஜகோபால் கைதானார்

மாணவி புகார் சமூக வலைதளங்களில் ஆசிரியர் ராஜகோபாலின் பாலியல் அத்துமீறல் குறித்த வெளியான இன்ஸ்டராகிராம் பதிவுகளை பார்த்து முன்னாள் மாணவி புகார் அளித்திருந்தார். ஆசிரியர் ராஜகோபால் மீது அப்போது பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் எடுக்கவில்லை என்றும் அவரது பாலியல் தொந்தரவால் தான் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் புகாரளித்திருந்தார்.



வடபழனி காவல்நிலையம் இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் நேற்று பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நட்சத்திரங்களும் அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பி இருந்தனர். இந்த சூழலில் ராஜகோபால் மீது போக்ஸா சட்டம் பாய்ந்துள்ளது. வடபழனி காவல்நிலையத்தில் வைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷ்னர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்

கண்டுபிடித்த போலீஸ் அப்போது ஆசிரியர் ராஜகோபால் தன்னுடைய செல்போன், லேப்டாப்பில் இருந்து பல குருஞ்செய்திகளையும், போட்டோக்களையும் அழித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சைபர் க்ரைம் போலீசார் மீட்டுள்ளனர். அதில் பல மாணவிகளுக்கு செல்பி அனுப்புவது, சினிமா அல்லது வெளியில் செல்லலாம் என குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற ஆதாரங்கள் அதில் உள்ளதாம்

மாணவிகளின் புகார் தொடர்பாக ராஜகோபாலிடம் போலீசார் கேட்ட போது முதலில் மறுத்த அவர், எதுவும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார், ஆனால் போலீசார், புகைப்படங்கள், குறுஞ்செய்திகளை காட்டி கேட்ட போது குற்றத்தை ஒப்புக்கொண்டார்,. மாணவிகளை வகுப்பறையில் கிண்டல் செய்வதும், இரட்டை அர்த்ததில் பேசுவதை ஜாலியாக தான் செய்து வந்ததாகவும், இது இந்தளவிற்கு விபரீதத்தில் முடியும் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் வாக்குமூலத்தில் ராஜகோபால் தெரிவித்துள்ளார். நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய அவரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

ராஜகோபால் மீது புகார்

ராஜகோபால் மீது புகார்

இதனிடையே பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது மாணவிகள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டு கொண்டதுக்கு இணங்க மேலும் பல மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக