செவ்வாய், 25 மே, 2021

ஏ ஆர் ரகுமானை துரத்திய பத்ம சேஷாத்திரி பள்ளிக்கூடம்! பீஸ் கட்ட முடியாத உனக்கு படிப்பேன்? தெருவில் போய் வாசி யாரும் காசுபோடுவார்கள்.. திமிர் காட்டிய பத்மா ...

மின்னம்பலம் : பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சினையுடன் தொடர்புடைய மற்ற சம்பவங்களும் தற்போது வெளியாகி வருகின்றன.

பிரபல பத்மா சேஷாத்திரி  பள்ளியில் பல சினிமா திரைபிரபலங்கள் படித்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் அங்குதான் படித்திருக்கிறார். அந்த நேரத்தில் ரகுமானுடைய குடும்பம் சூழ்நிலை காரணமாக பள்ளி கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை பள்ளியை விட்டு நீக்கியுள்ளது பள்ளி நிர்வாகம்.

இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் பேசிய வீடியோவில், “ பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லையென்றால், கோடம்பாக்கம் "பிளாட்பார்ம்க்கு"  கூட்டிட்டு போங்க, அங்கே பணம் போடுவாங்க…இங்கே உங்க பையனை கூட்டிட்டு வராதீங்க என்று எனது அம்மாவிடம் கூறினார்கள்” என பேசியுள்ளார்.

அதுபோன்று இந்த சம்பவம் குறித்து மதுவந்தியும் ஒரு நிகழ்ச்சியின்போது பேசியுள்ளார். அந்த வீடியோவில்” உலக புகழ்பெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பத்ம சேஷாத்ரி பள்ளியிலிருந்து பாதியிலேயே நிறுத்தப்பட்டவர். ஆனால், தற்போது அவர் எந்த உயரத்தில் இருக்கிறார்” என்று பேசி அந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளார்.

பிஎஸ்பிபி பள்ளி பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் இந்நேரத்தில், கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்த ஏ.ஆர்.ரகுமானை வெளியேற்றிய சம்பவம் பெரியளவில் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

-வினிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக