சனி, 17 ஏப்ரல், 2021

மன்சூர் அலிகான் மக்களை வீணாக பயமுறுத்த கூடாது . கொரோனா வாக்சின் பற்றிய வாட்சப் வதந்திகளை பரப்பக்கூடாது

நடிகர் மன்சூர் அலிகான் அந்தர் பல்டி... தொண்டாமுத்தூரில் போட்டியிட உறுதி..  மன்சூர் மனதை மாற்றிய அந்த அறிவுரை..! | Actor Mansoor Alikhan committed to  compete in ...

Devi Somasundaram  : விவேக் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வாசல்ல  திரு மன்சூர் அலிகான்  சத்தம் போடற வீடியோ ஒன்னு பார்த்தேன்.
விவேக் அவர்களுக்கு  கோவிட்  வேக்ஸின் போட்டதால  தான்  விவேக் உடல் நிலை  பாதிச்சது, கொரானா  டெஸ்ட் எல்லாம்  நிறுத்துங்கன்னு  பத்திரிக்கையாளர் முன்னாடி சத்தம்  போடறார் .
மன்சூல் அலிகான நான் குற்றம்  சொல்ல விரும்பவில்லை.அவருக்கு விவேக்  மீது  உள்ள பாசத்தில் வர  கோபம் இயல்பானது என்று எடுத்துக் கொள்வோம் .
விவேக் ஊசி  போட்டதால் தான் பாதிக்கப்பட்டாரா ?. கோவிட்  ரெஸ்பிரிரேட்டரி .அதாவது சுவாசப் பாதை  தொற்று .அதற்கும்  ஹார்ட் அட்டாக்கும்  சம்பந்தமில்லை .
ஹார்ட் அட்டாக் வர  நம் இதயத்துக்கு ரத்தம் போகும் அல்லது வரும்  பாதைகளில்  ஏற்படும்  அடைப்பு காரணம் .அந்த  அடைப்பு  ஒரே  நாளில் வராது .
கொஞ்ச கொஞ்சமா  ஏற்படும் டெபாஸிட்ல  நடப்பது....முதல் நாள்  ஊசிபோட்ட  உடனே அப்படி ஆக   99%  வாய்ப்பில்ல..ஆக  இது தடுப்பூசியால் நடந்தது  இல்லை


ஆனா  மன்சூர் அலிகான்  சத்தப்போட்டு  கூட்டம் கூட்டியதால்   மருத்துவமனை நிர்வாகமும் ,அரசும்  பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள் .
டாக்டர்ஸ், ராதா கிருஷ்ணன்  ஐ  ஏ எஸ்  இணைந்து  ஒரு  ப்ரஸ்  மீட்  தர நேர்கிறது .
கோவிட் சிச்சுவேஷன்  ரொம்ப  மோசமா  இருக்கு.டாக்டர்ஸக்கும் , அரசு நிர்வாகத்திற்கும்  கடும் வேலை..இதற்கு இடையில் தினம் ப்ரஸ் மீட் வைத்து விளக்கம் தர வேண்டிய  சூழலை அவர்களுக்கு உருவாக்கக் கூடாது..
ஏற்கனவே பணிச் சுமையில் வாடுகின்றவர்களுக்கு  மேலும்  பணிச்சுமை தரக்கூடாது ..
டாக்டர்களும் மனிதர்கள் தான்...அவர்கள்  அரசின் விதிகளுக்கு  கட்டுபட்டே  ஆகனும் .
அதை மீறி எதுவும் செய்ய  இயலாது .
கோவிட்டில் நாம்  பல  மருத்துவர்களை அதுவும்  இளம்  மருத்துவர்களை  பலிகொடுத்து  உள்ளோம்  என்பதையும் நினைவில்  வைக்கனும் .
ஒரு சமூகம் பதட்டத்தில் இருக்கும் போது  அதை  மேலும்  பதட்டமடைய செய்வது  சரி இல்லை..தயவுசெய்து  மக்கள்  அமைதியா இருங்க...
கண்ட  கண்ட  பார்வர்ட் மெஸேஜ்களை அனுப்பி மக்களை உளவியல் ரீதியா  பாதிக்க வைக்காதீங்க..
இந்த  ஹீலர் பாஸ்கர் மாதிரி  NGO கள்  உங்களுக்கு கண்டண்ட்  குடுத்துட்டு  பதுங்கி விடுவார்கள் ..நாளை அரசு இந்த  போலிச் செய்திகள் பரப்புவோர் மீது  நடவடிக்கை எடுத்தால் மாட்டப் போவது ஏதும் அறியாமல்  மன்சூர்  மாதிரி  சத்தம்  போடும் அப்பாவி மக்களா  தான் இருக்கும் .
தயவு செய்து  அமைதியா இருங்க.
அரசு நிர்வாகம் என்பது  தன்னிச்சையா  மட்டும் முடிவெடுக்க  இயலாது...மத்திய அர்சு , WHO , ஐ நா சபைன்னு பல  கண்காணிப்பு  இருக்கு..
நான் என்  ஸ்டேட்ல  கொரானா டெஸ்ட்  நிறுத்திகறேன்னு நாம்  தன்னிச்சையா முடிவெடுக்க இயலாது ..இந்தியாவே எடுக்க இயலாது ..உலக நாடுகளுக்கு பதில் சொல்லி ஆகனும் .
கண்ணுக்கு முன்ன  கோடிக்கணக்கான உயிர் போய் கொண்டே இருக்கும்  போது  அப்படி  ஒரு  நோயே  இல்லைனு  சொல்ல முடியாது.
எடப்பாடி அரசே ஏற்கனவே  தேவையான  வசதிகளை  வேகமா  செய்யவில்லை..இதில்  மேலும் நெருக்குதல் தந்து  சுத்தமா செயல்படவிடாம  செய்வதால்  நஷ்ட்டம்  பொது மக்களுக்கு  தான்
எந்த அரசும் தன் மக்களை கொல்ல மருந்து தராது..தரவும் முடியாது ..அப்படி தந்தாலும்  சர்வதேச  சமூகம்  கேள்வி கேட்கும் ..அதனால   தயவுசெய்து  மற்றவரை  பேனிக் செய்யாம அமைதியா  இருங்க.
இவை எல்லாம்  மீறி  எதுவும் தவறு நடந்தால் பகுத்தறிவு இயக்கங்கள் சும்மா  இருக்காது.உடனே  எதிர்ப்பு வரும் .பொறுப்பை அவர்களிடம் தந்து விட்டு அமைதி காப்போம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக