வியாழன், 22 ஏப்ரல், 2021

சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனாவால் மரணம்

 Mathivanan Maran  - /tamil.oneindia.com :  டெல்லி: சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகனும் பத்திரிகையாளருமான ஆஷிஸ் யெச்சூரி (வயது 34) கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா உச்சவேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது
ஒருநாள் கொரோனா மரணங்களும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. இதுவரை 13 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இதனிடையே சி.பி.எம்.பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரியின் மூத்த மகனும் பத்திரிகையாளருமான ஆஷிஸ் யெச்சூரி, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலையில் காலமானார்.
டெல்லி குருகிராம் மருத்துவமனையில் ஆஷிஸ் யெச்சூரி சிகிச்சை பெற்று வந்தார்


இதனால் சீதாராம் யெச்சூரியும் தனிமைப்படுத்தி இருந்தார். இந்த நிலையில்,
இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் ஆஷிஸ் யெச்சூரி காலமானார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சீதாராம் யெச்சூரி, மகன் ஆஷிஸ் யெச்சூரிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் இரங்கல் ஆஷிஸ் யெச்சூரி மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக