ஞாயிறு, 18 ஏப்ரல், 2021
-நடிகர் விவேக் குடும்பத்தினர் பேட்டி! இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்''
நக்கீரன் செய்திப்பிரிவு -
ஸ்டாலின் :
நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலமானார்.
இந்நிலையில் இன்று நடிகர் விவேக்கின் குடும்பத்தார் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி, ''என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி. அதை என்றைக்கும் நாங்கள் நன்றியோடு நினைத்துப் பார்ப்போம். நீங்கள் கொடுத்தது எங்கள் கணவருக்கு மிகப்பெரிய கௌரவம். காவல்துறை சகோதரர்களுக்கு மிக்க நன்றி கடைசி வரைக்கும் நீங்கள் கூட இருந்தீர்கள். ரொம்ப நன்றி. நேற்று நெடுந்தூரம் என் கணவரின் கடைசி நொடி வரைக்கும் வந்த அவருடைய கோடான கோடி ரசிகர்களுக்கு நன்றி'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக