ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு- அரசு அறிவிப்பு

maalaimalar : சென்னை: தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரிசோதனை. இந்தநிலையில் வருகிற 20ந்தேதி முதல் இரவு 10 மணி வரை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஏப்ரல் 20ந்தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கின் போது தனியார் பொது போக்குவரத்து ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை. மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்படும். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ஒதிவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக