nakkeeran :திமுகவில் இருந்து விலகி பாஜக சென்றவர் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவான கு.க.செல்வம். பாஜகவில் இணையும்போதே, எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் மீண்டும் அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் தனக்கு சீட் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடனே இணைந்துள்ளார். தென்சென்னை வடகிழக்கு மா.செவான ஆதி ராஜாராம்
ஆயிரம் விளக்கு தொகுதியைக் கேட்டுவந்த நிலையில், அவருக்கு கொளத்தூர்
தொகுதி ஒதுக்கப்பட்டது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட
அத்தொகுதி மா.செ.வான வெங்கடேஷ் பாபு, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, திருநங்கை
அப்சரா ஆகியோர் விருப்பு மனு கொடுத்திருந்த நிலையில், தொகுதியே கேட்டகாத
இவருக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது எப்படி என்று சர்ச்சை எழுந்துள்ளது.
அதிமுக, ஆயிரம் விளக்கு தொகுதியை பாஜக
கூட்டணிக்கு கொடுத்த நிலையில், அத்தொகுதியைச் சேர்ந்த ஆதி ராஜாராமுக்கு
கொளத்தூர் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கொளத்தூர் திமுக
தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் விஐபி தொகுதி என்பதால், ஆதி ராஜாராமும்
புலம்பிவருகிறாராம். தற்போது ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜ.கவிற்கு
சென்றதால், குஷ்புவுக்கு இந்த வேட்பாளர் வாய்ப்பு கிடைக்குமா? இல்லை
கு.க.செல்வத்திற்கு வேட்பாளர் வாய்ப்பு கிடைக்குமா என்ற பிரச்சனை வெடித்து
வருகிறதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக