ஞாயிறு, 14 மார்ச், 2021

இலங்கையில் புர்கா தடை ! ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பள்ளிகளை மூடவும் அரசு முடிவு!

 Rayar - tamil.oneindia.com : கொழும்பு: இலங்கையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடைவிதிக்கப்படும் என்றும், இஸ்லாமியர்களின் ஆயிரக்கணக்கான இஸ்மாமிய பள்ளிகள் மூடப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதற்கு அந்நாட்டு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது.இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன
இலங்கையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடைவிதிக்கப்படும் என்றும், இஸ்லாமியர்களின் ஆயிரக்கணக்கான இஸ்மாமிய பள்ளிகள் மூடப்படும் என்றும் அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதுதொடர்பான அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், இதற்கு அந்நாட்டு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்! தொடக்க காலங்களில் முஸ்ஸிம் பெண்கள் புர்கா அணியவில்லை.


இந்த மத அடிப்படைவாதம் அண்மையில் தான் தோன்றியது என்று சரத் வீரசேகர கூறியுள்ளார்.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களை புதைக்ககூடாது, எரிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு இலங்கை அரசு கட்டாயப்படுத்தியது குறிப்பிடத்தக்கது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக