புதன், 3 மார்ச், 2021

சென்னை புத்தக கண்காட்சி 2021 அதிகமாக ட்யூப்சேனல்காரர்கள்..

  

Abdul Hameed Sheik Mohamed : புத்தகக்கண்காட்சியில் வாசகர்களைவிட அதிகமாக ட்யூப்சேனல்காரர்களை பார்க்க முடிகிறது. எனக்கு மீடியா ஃப்ரண்ட்லியான ஆள் என்று பெயர் உண்டு. என்னையே வெறுக்க வைத்துவிட்டார்கள். நண்பர்களிடம் ஐந்து நிமிடம் பேசமுடிவதில்லை. ஒரு கேமராவை நட்டு வைத்து மைக்கை நீட்டுகிறார்கள். ஒரே கேள்விதான் ' புத்தகக் கண்காட்சி பற்றி ஏதாச்சும் சொல்லுங்க'. நானும் ஒரே பதிலை நூறுமுறை சொல்லி களைத்துவிட்டேன். பலரிடமும் நாசூக்கான சொல்லிப்பார்த்துவிட்டேன் ' யூ ட்யூப்காரர்களுக்கான எந்தக் கண்டெண்டும் இங்க கிடைக்காது..டைம் வேஸ்ட் பண்ணாதீங்க' என்று. அவர்களுக்கு ஏதாச்சும் ஒரு ஃபுட்டேஜ் வேண்டும். ஒரு எழுத்தாளனிடம் , பதிப்பாளனிடம் கேட்க உருப்படியான எந்தக் கேள்வியும் இல்லையா? கொஞ்சமாச்சும் ஹோம் ஒர்க் பண்ணுங்க.

நாளையிலிருந்து கீழ்கண்ட கேள்விகளை கண்காட்சியில் டிவி மற்றும் யூ ட்யூப் சானல்காரர்கள் என்னிடம் கேட்க வேண்டுமாய் வேண்டுகிறேன்.
1. மனுஷ்..விற்கவே விற்காத புத்தகங்களைபோட எத்தனை வட்டிக்கு கடன் வாங்குவீர்கள்?
2. இரவெல்லாம் விழித்திருந்து கவிதை எழுதுகிறீர்களே..உங்களுக்கு கரண்ட் பில் எவ்வளவு வருகிறது?
3. உங்கள் நண்பர்களுக்கோ சிநேகிதிகளுக்கோ உங்கள் புத்தகங்களை படிக்கும் பழக்கம் உண்டா?
4. இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது இவ்வளவு தாமதமாவதற்குக் காரணம் விருது உங்களுக்கா கலாப்ரியாவுக்கா என தேர்வுக்குழுவில் கடும் மோதல் நிலவுவதுதான் என்கிறார்களே உண்மையா?
5. உங்கள் சக கவிஞர்கள் உங்களை இவ்வளவுதூரம் வெறுக்க என்ன காரணம்?
6. உங்களது மூன்று புதிய புத்தகங்களும் உத்தேசமாக எத்தனை கிலோ இருக்கும்? அது தவறி காலில்விழுந்தால் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புண்டா?
7. நூலக ஆணைக்கு சென்ற ஆண்டு நீங்கள் விண்ணப்பித்த, நீங்கள் எழுதிய 15 நூல்களும் நிராகரிக்கப்பட்டதற்கு என்ன காரணம்?
8. உங்களுக்கு நிறைய வாசகிகள் இருப்பதாக சொல்லப்படும் கட்டுக்கதைகள் யாரால் உருவாக்கப்படுகின்றன,?
9. உங்கள் வளர்ப்பு நாய்க்கு உங்கள் கவிதைகளை படித்துக் காட்டும் பழக்கம் உண்டா?
10. மனுஷ் நிறைவாக ஒரு கேள்வி..எப்போது தற்கொலை செய்துகொள்ளப்போகிறீர்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக