புதன், 3 மார்ச், 2021

திமுக பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியீடு? காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள்?

hindutamil.in : திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மமகவுடன் நேற்று முன் தினம் தொகுதி பங்கீடு உறுதியானது. இந்நிலையில் நேற்று மதிமுக, விசிகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும், இன்று கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸூடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவில் விருப்ப மனுத் தாக்கல் கடந்த 28-ம் தேதி முடிவடைந்த நிலையில், விருப்ப மனுத் தாக்கல் செய்தவர்களுடனான நேர்காணல் வருகிற 6-ம் தேதி முடிவடைகிறது. 

பட்டியல் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், வரும் 7-ம் தேதி திருச்சி பொதுக்கூட்டத்தில் கூட்டணிக்கட்சி தலைவர்கள் முன்னிலையில் திமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட வாய்ப்புள்ளது என்று திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக