செவ்வாய், 16 மார்ச், 2021

130 கோடி மக்களை அடிமைகளாக்கி உலகின் மிகப்பெரும் பணக்காரனாகிய அதானி!

May be an image of 3 people and text that says 'NEWS UPDATE SUN NEWS உலகின் பெரும் பணக்காரராக மாறிய அதானி! அமேசானின் ஜெப் பெசோஸ், டெஸ்லாவின் எலான் மஸ்க் ஆகியோரை விஞ்சி, நடப்பாண்டில் உலகிலேயே அதிக வருவாய் ஈட்டிய தொழிலதிபராக அதானி உருவெடுத்துள்ளார் கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் அவரது சொத்து மதிப்பு சுமார் 1.17 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது! SUNNEWSTAMIL SUNNEWS 13-MAR-21'
Sergio Marquina : · 50 ஆண்டுகளில் காங்கிரஸால் சாதிக்க முடியாததை பாஜக ஐந்தே ஆண்டுகளில் சாதித்துக் காட்டியிடுக்கிறது. காங்கிரஸ் ஆட்சி எவ்வளவு மேலானது சிறப்பானது என்று நாட்டு மக்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது அதற்கு பாஜக தானே முழு காரணம். எவ்வளவு பெரிய சாதனை இது. ஜவகர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் சிந்தனையும் செயல்பாடும் நாட்டுக்கானதாகவே இருந்திருக்கிறது. நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்திருப்பது இப்போது தெரிகிறது.
பாஜகவின் பிரதமரும் நிதியமைச்சரும் யாருக்கானவர்கள் யாருக்காக உழைக்கிறார்கள் என்பதும் இப்போது வெளியே தெளிவாகதெரிய ஆரம்பித்திருக்கிறது. அதானி உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார் என்பது இன்றைய செய்தி.
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாய நாட்டின் பிரதமரை ஸ்பான்சர் செய்து 130 கோடி மக்களை தனது வலிமையான சாம்ராஜ்யத்தின் அடிமைகளாக மாற்றி இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடுமையான விலைவாசி உயர்வும் பணவீக்கத்துக்கும் காரணமாகியிருக்கிறது இவர்களால் ஸ்பான்சர் செய்யப்பட்ட கட்சியின் ஆட்சியால். ஒரு நாடு முழுவதும் வியர்வை சிந்தி கொண்டிருக்கிறது ஒரு சிலர் வசதியாக வாழ்வதற்கு.
இந்திய தொழில் உற்பத்தித் துறைக்கு கடுமையான கச்சாப்பொருள் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கி கடுமையான விலைவாசி உயர்வுக்கு ஆட்சியாளர்களே காரணமாகி இருக்கிறார்கள்.
இந்தியாவில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு ஏற்றுமதி செய்ய தடையில்லை ஆனால் நிறுவனங்கள் உலகில் எந்த மூலையில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாது. மேக் இன் இண்டியா திட்டம் என்பது இந்திய நுகர்வோரை வஞ்சிக்கும் ஒரு கொடுமையான திட்டம்.
இந்தியாவின் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் இதர கச்சாப் பொருட்களின் விலைவாசி உயர்வு மட்டுமே அதானி அம்பானியின் மணிக்கு 60 முதல் 70 கோடி வருமானம் பெற காரணமாகி இருக்கிறது.
மொத்த நாடும் பட்டினி கிடக்கு உலக அரங்கில் இந்திய கார்ப்பரேட் முதலாளிகள் நெஞ்சுக்கு குறுக்கே கைகள் இரண்டையும் வைத்து கோட் சூட் போட்டுக் கொண்டு ஸ்டைலாக சிரித்துக் கொண்டு போஸ் கொடுப்பதற்கு.
அதானி ஒரு பாஜகவின் முகமூடி அவ்வளவு தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக