செவ்வாய், 16 மார்ச், 2021

ஆமை ஓடும் அதன் மேல் ஒரு பிராடும்!

May be an image of 1 person and text that says 'நாய் டம்ளர் வழங்கும் சைமன் ஆமை ஓடும் அதன் மேல் ஒரு பிராடும் ஒரு டுபாகூரின் டூப்ளிகேட் பயணம்'

Antony Valan
: மீனவ இளைஞர்கள் சீமான்டியிடம் ஏமாற என்ன காரணம்னு பலர் கேட்கிறார்கள்.. மீனவ இளைஞர்கள் பாவம்..அவனுக்கு ஆக்ரோசமா எவனாவது அடிதடியா அடிப்பேன் உடைப்பேன் சிங்கள ராணுவத்தை கடலில் வைத்து கொல்ல துப்பாக்கி தருவேன் தனி ராணுவம் மீனவர் படை அமைப்பேன்னு எவனாவது உணர்ச்சி பொங்க பேசிட்டாலே சில்லறையை சிதர விட்டுருவான்..
கச்சத்தீவை மீட்க ஐம்பதாயிரம் ராணுவ வீரர்களை ஒரே இரவில் அனுப்பி ராசபக்சே குடும்பத்தை கொன்று கச்சத் தீவை மீட்பேன்னு பேசினா அடேய் என்னடா பேசுற என்று கேட்பதற்கு பதிலா நாலு விசிலா சேர்த்து அடிப்பான்...அவனது இயல்பு...
இது மீனவர் இளைஞர்களை தவறாய் சொல்ல அல்ல. அவனது இயல்பே வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு மாதிரியான பேச்சுகள். அடில புடில என்று பேசினால் நம்ம பய பூரா ஆதரவு தான்.
மனதளவில் வெள்ளந்தியான பசங்களுக்கு சீமான்டி என்னும் ஆமைக்கறி நரியின் தந்திரம் புரியல..ரொம்ப தாமதமா தான் புரியும்.
பலி கொடுக்க கொண்டு போகப்படும் ஆடுகளை போல சீமான்டி கையில் காட்டும் இலை தழைகளில் ஏமாந்து போய் இருக்கான்..
காணாத குறைக்கு சீமான்டி சந்தர்ப்பவாதமாய் சாதிப்பெருமையை பேசுவான். மீனவன்னா வீரன் மாவீரன்னு உசுப்பேத்தி பேசுவான்.
நீங்க இந்தியாவை காக்கும் கடற்படை வீரர்கள்னு பேசுவான். இது போன்ற சில உசுப்பேத்தல் மற்றும் சாதிப்பெருமை குலப்பெருமைகளை பேசிட்டா நம்ம பயலை கேட்கவா வேணும். தீயா நிற்பான்..
இன்னொண்ணு எவன் வேணும்னாலும் சீமான்டி கூட போட்டோ எடுக்கலாம். அதன் மூலம் ஏய் எனக்கு சீமான்டி் ரொம்ப நெருக்கம் பழக்கம்னு காட்டிக்கிற ஒரு விளம்பர மோகம்.
நானும் ஒரு கட்சியில பதவியில இருக்கேன் என்று அதுல அவனுக்கு ஒரு பெருமை. சீமான்டி கட்சியில் பதவி வாங்குவதும் சமத்துவ மக்கள் கட்சியில்்பதவி வாங்குவதும் ஒண்ணு தான்.மய்யம் கட்சியில் வர்றவன் போறவனுக்கு முப்பது சீட் மாதிரி..
அதுனால மாணவர் அணி மீனவர் அணி இளைஞர் அணின்னு எதோ ஒரு பதவியை மீனவ இளைஞனுக்கு கொடுத்துட்டா அவன் பாவம் அது ஏதோ ஐநா சபை பதவி போல பெருசா நினைக்கிறான்...
அடிப்படையில் பெரிய கட்சிகளில் அரசியல் அங்கீகாரம் கிடைக்கலன்னு சொன்னதும் சீமான்டி கட்சியில கிடைக்குற பதவி ரொம்ப பெருசா தெரியுது..அதுல அவனுக்கு ஒரு மயக்கம்...பெரிய அங்கீகாரம்னு நெனச்சி சீமான்டியின் அயோக்கியதனங்களை கேள்வி கேட்காமல் மயங்கி கிடக்கிறான்...
இன்னும் சொல்லப் போனா சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர் பதவி கூட கிடைச்சிடலாம். ஐநூறு ஆயிரம் ஓட்டு தான் வாங்குவான் என்றாலும் சட்டமன்ற வேட்பாளர்னு அவனுக்கு ஒரு மிதப்பான கற்பனை உலகம்...
இப்படியான உளவியல் காரணங்கள் பல இருக்கு..
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக