திங்கள், 15 பிப்ரவரி, 2021

வேளாண் சட்டத்தை எதிர்த்த இளம் செயற்பாட்டாளர் திஷா ரவி கைது!

வேளாண் சட்டத்தை எதிர்த்த இளம் செயற்பாட்டாளர் திஷா ரவி கைது!

Minnambalam : மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து பகிர்ந்த ட்வீட் தொடர்பாக பெங்களூருவுவைச் சேர்ந்த காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் 21வயதான திஷா ரவி என்கிற சமூக செயற்பாட்டாளரை டெல்லி போலீசார் இன்று (பிப்,14) கைது செய்துள்ளனர்.   திஷா ரவி தனி நபர் இல்லை. "உங்கள் தலைமுறை வயது மூப்பால் இறந்து போவீர்கள். ஆனால், எங்கள் தலைமுறை காலநிலை மாற்றத்தால் கொண்டுவரும் பேரழிவுகளால் இறந்து போவோம்" என எழுந்து நின்று ஒவ்வொரு இளைஞருக்காவும் குரல் உயர்த்தியவர்.  கடல், மண், காற்று, ஆறு என எல்லாவற்றையும் மாசாக்கும் பெருமுதலாளிகள் இவற்றையெல்லாம் பாதுகாத்து அடுத்த தலைமுறை பிள்ளைகள் பயன்படுத்த குரல் கொடுத்த திஷா ரவியை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறையாக வெடித்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களால்தான் இந்த வன்முறை தூண்டப்பட்டதாக கூறும் டெல்லி போலீசார், இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் உலவிய டூல்கிட்டைக் அதற்கு ஆதாரமாக கூறுகின்றனர்.

இந்த டூல்கிட்டை சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அவர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்பந்தப்பட்டதாகக் கூறி பெங்களூருவில் 21 வயதான திஷா ரவி என்பவரை டெல்லி போலீஸின் சைபர் பிரிவு இன்று கைது செய்துள்ளது. திஷா ரவியும் சுற்றுச் சுழலியல் ஆர்வலர் ஆவார். 2018ஆம் ஆண்டு "Friday for Future" என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன்பு பருவநிலை மாற்றத்திற்காக கிரேட்டா தன்பெர்க் போராட்டம் நடத்தியபோது இந்தியாவில் இந்த இயக்கம் உருவாகியது. கைது செய்யப்பட்ட திஷா ரவியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் #gobackmodi ஹாஸ்டேக் அடுத்தப்படியாக #releasedisharavi என்ற ஹாஸ்டேக் இளைஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஷேர் செய்து ட்ரண்டாகி வ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக