சனி, 13 பிப்ரவரி, 2021

ராமகிருஷ்ண மடம் ஒரு அரசியல் கூடம்... விவேகானந்தர் ஒரு அரசியல்வாதி

May be an image of 2 people
Sathishsr Karat Tamilan: Osho on_Ramakrishna Mission. Ramakrishna and Vivekananda. இந்த இரு பெயர்களை ஒரே நேர்கோட்டில் பயன்படுத்துவதே தவறு. இருவரும் வெவ்வேறு தரத்தை கொண்டவர்கள். ராமகிருஷ்ணா மிஷன் என்பதை ராமகிருஷ்ணர் உருவாக்கவில்லை. விவேகானந்தரின் படைப்பு அது. அதனால் அது ஞானமடைந்த மனிதரால் உருவாக்கப்படவில்லை. விவேகானந்தர் ஒரு அறிவார்ந்த அரசியல்வாதி. கிறிஸ்தவர்கள் மத்தியில் பேசும்போது ஜீசசை உயர்த்தி பேசுவார். புத்த மதத்தை பற்றி பேசும்போது புத்தரை உயரத்தி பேசுவார். இயேசுவிடமோ புத்தரிடமோ உள்ள வெளிப்படையான முரண்பாடுகளை அவர் பேசவே மாட்டார். அவர்கள் வேதங்களின் தவறுகளைப் பற்றி அவர் பேச மாட்டார். நான் அப்படியல்ல.. தவறுகளை சுட்டிக்காட்ட நான் தயங்கமாட்டேன். ராமகிருஷ்ண மடம் எல்லா மதங்களின் சங்கமாம்..!!. என்னுடைய பார்வையில் எல்லா மதங்களின் சங்கமம் என்பது எல்லா பொய்களின் சங்கமம் என்பதாகும். இந்து கிருஸ்தவ முகமதிய மதங்கள் நமக்கு தேவையில்லை. மதத்தன்மை இருந்தாலே போதுமானது. உண்மையும் அன்புமே அந்த மதத்தன்மையாகும். உலகம் முழுமையாக அந்த மதத்தன்மை இருக்க வேண்டும். கிருஸ்தவ ஜுடாயிச யூத முகமதிய மத சங்கமங்கள் தேவையற்றது.
ஒரு மனைவியை திருமணம் செய்வதை சட்டமாக கொண்ட இந்து மதத்துடன் நாலு மனைவியை திருமணம் செய்யலாம் என சொல்லும் முகமதிய மதம் எப்படி சங்கமிக்கும். சாதாரண முகமதியருக்கு நாலு மனைவி சரி என்றால் ஒன்பது மனைவியும் ஒருவர் வைத்துக் கொள்ளலாம். அதற்கு தேவ தூதராக முகமதுவாக இருக்க வேண்டும்.
எப்படி இந்த மதங்கள் ஒன்றிணைய முடியும். ஜைனர்கள் நிர்வாணமாக இருந்து நிர்வாணமாக வாழ்ந்தால் மட்டுமே ஞானம் சித்திக்கும் என்கிறார்கள். ஜைனர்களின் நோக்கில் புத்தர் ஞானமடையாதவர். ஏனெனில் புத்தர் ஆடை அணிபவர். இவர்கள் எப்படி சங்கமிப்பார்கள்.
புத்த ஜைன இந்துக்களிடம் போய் இறைவனின் ஒரே குழந்தை இயேசு.. இவர் மக்களின் பாவங்களை கழுவுவதற்காக சிலைவையில் அறையப்பட்டார் என சொன்னால் அவர்கள் சிரித்துவிடுவார்கள். அவர்கள் கடவுள் தன்னிச்சையாகவே இவ்வுலகை படைத்தார். .. அவர் நினைத்தால் எந்த சூழலையும் மாற்றுவார். .. அதற்கு எந்த நாடகமோ சிலுவையோ தேவையில்லை என்பார்கள். மேலும் இந்திய மதங்களில் சிலுவையில் அறைதல் பாவமாகும். இந்தியர்கள் ஞானமடைந்தவரை சிலுவையில் அறையமாட்டார்கள். அந்த அளவிற்கு இறைவன் கொடியவனல்ல.
இப்படிப்பட்ட மதங்களை எப்படி ஒருவரால் சங்கமிக்க வைக்க முடியும்.
மதங்கள் என்பது ஒரு பஜார் மாதிரி. ஒருவர் கருத்தோடு ஒருவர் ஒத்துப்போக மாட்டார்கள். முகமதியர் மனிதன் உண்பதற்காகவே இறைவன் விலங்குகளை படைத்தான் என்பார்கள். அவர்களின் வேத குறிப்பையும் அதற்கானதாக காட்டுவார்கள்.
அமெரிக்காவில் நான் சிறையில் இருந்தபோது தியானத்தில் இருந்தேன். ஒரு சிறை அதிகாரி என்னிடம் பைபிளை கொடுத்து இது இறைவனின் நூல் என்றார். எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்டால் இயேசுவே இப்புத்தகத்தில் எழுதியிருப்பதாக சொன்னார். நான் ஒரு புத்தகத்தை எழுதி அதில் இது இறைவனின் புத்தகம் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா என கேட்டால் மாட்டேன் என்றார். அவர் நோக்கம் என்னை மதம் மாற்றுவது மட்டுமே. அவர்களுக்கு பைபிள் இறைவன் நூல் என்றால்.. வேதம் ..? குரான்..?.. கீதை..? இவையெல்லாம் இறைவனின் நூலில்லையா?.
ராமகிருஷ்ண மடம் ஒரு அரசியல் கூடம். அதனால் தான் முரண்பாடுகளை மறைத்துவிட்டு எல்லோருக்கும் நல்லவையாக அவை நடக்க முயல்கிறது. யாரையும் அவர்கள் எதிர்ப்பதில்லை. என்னுடைய நிலைபாடு வேறு. எல்லா மதங்களும் மிகப் பழமையானவை.. பொய்கள் நிறைந்தவை. இந்து முகமதிய கிருஸ்தவ மத முத்திரைகள் இல்லாத புதிய விழிப்புணர்வு கொண்ட புதிய மதமே தற்போதைய தேவை. நான் அவர்களிடமிருக்கும் மத முத்திரையை வெளியே எடுத்துவிட விரும்புகிறேன். எல்லோரிடமும் இந்த மதங்கள் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறேன். என்னுடைய வாதத்தின் மூலமாக அவர்களிடமுள்ள பத்தாம்பசலித்தனமான புரட்டுகளை நீக்க விரும்புகிறேன்.ஐயாயிரிம் ஆண்டுகளாக மத த்தின் பெயராலும் ஜிகாத்தின் பெயராலும் இரத்த ஆறு ஓடிவருகிறது. இவ்வளவு பாதிப்புகளை அனுபவித்தாலும் அவர்கள் அடைந்தது ஒன்றுமில்லை.
ராமகிருஷ்ணர் ஒரு ஞானி. ஆனால் அவர் படிப்பறிவில்லாதவர். நாகரீகமற்றவர். சாதாரண கிராமிய மொழி பேசுபவர். விரிவாக அழகாக விளக்குபவர்களுக்கு அனுபவ ஞானமிருக்காது. ஞானவானாக இருப்பவர்களுக்கு அதை சரியாக விளக்கத் தெரியாது. சூரிய அஸ்தமனத்தை ஒருவன் பார்த்தாலும்.. அதை ஓவியம் வரையத் தெரியாது. பிகாசோ அதை பார்க்காமலே வரைந்துவிடுவார். இது தான் இங்கே பிரச்சினை.
ராமகிருஷ்ணர் எல்லாம் தெரிந்த ஞானி. விவேகானந்தர் தன் குருநாதர் அளவிற்கு ஞான அனுபவம் அடையாதவர். அவரே ராமகிருஷ்ண மடத்திற்கு தலைமையேற்றார். குருடர் மடத்திற்கு குருடர் தலைமையேற்பது மாதிரி தான் இது. ராமகிருஷ்ணரோ அவர் தத்துவங்களோ அங்கே இப்போது இல்லை. விவேகானந்தர் புத்தகங்கள் அங்கே உள்ளது. ராமகிருஷ்ணர் எந்த புத்தகமும் எழுதியதில்லை. எந்த வழிமுறையையும் அவர் ஏற்படுத்தியதில்லை. சாதாரணமாக அமர்ந்து சாதாரணமாக பேசினார் அவ்வளவே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக