சனி, 13 பிப்ரவரி, 2021

நெய்வேலி சுரங்க பொறியிலாளர்கள் தேர்வு . ஆறு இலட்சம் பேர் தேர்வு எழுதி 1558 பேர் தேர்ச்சி .. அதில் வெறும் 8 தமிழர் மட்டுமே தேர்ச்சி

May be an image of text that says 'நெய்வேலி நிலக்கரி சுரங்க பொறியாளர் தேர்வு! தேர்வு எழுதியவர்கள் 6 லட்சம் நபர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் 1558 நபர்கள் தேர்ச்சி பெற்றவர்களில் தமிழர்கள் 8 நபர்கள் மட்டுமே! தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க மீண்டுமொரு சுதந்திர போராட்டத்தை நாம் முன்னேடுக்க வேண்டும்!'

Venkat Ramanujam : ஆட்சிக்கு வந்துவிட்டால் திமுக எல்லா பிரச்சனையும் தீர்த்து விடுமா . . கடந்த 10 ஆண்டு காலமாக "எல்லா பிரச்சனையும்" என் ஏற்று கொண்டதே #ஆட்சி மாற்றத்தின் அவசியமாக மட்டுமல்ல அறிகுறியாகவும் தங்களுக்கு படவில்லையா? .. முதல் தீர்வாக செய்யப்பட வேண்டிய பிரச்சனை என்பது compromise for state rights by ADMK என்பது தானே need of the hour.. மாநில உரிமைகளை தாரைவார்த்து அதிமுக அமைச்சர்கள் தங்களது பதவிகளை கட்டியாக பிடித்து வைத்து கொண்ட அதிமுக வின் செய்கைகளை மக்கள் விரும்பவே இல்லை என்பது தானே உண்மையின் முகம் பார்க்கும் கண்ணாடி?

தமிழக மக்களின் வேலை வாய்ப்புகளை இந்தி பேசும் வடக்கர்களுக்கு தாரைவார்த்து அதிமுக வருவது இன்று படித்து வேலையின்றி அல்லலுறும் பல் மில்லியன் தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை தருகிறது என #அதிமுக ஆட்சியாளர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் ..

தமிழ் .. தமிழ் என் வெளிபுறத்தில் பேசி விட்டு பாஜக வினர் வெறும் 6 கோடி நிதியை மட்டுமே ஓதுக்கி விட்டு ஹிந்தியை சம்ஸ்கிரதத்தை மட்டுமே தமிழகத்தில் 600 கோடி செலவினை செய்து புகுத்தி வருவது ஏன் ..
தமிழ் மண்ணிலே செயல்படும் 60க்கும் மேற்ப்படட் kendiravidyala வில் ஏன் ஒரு தமிழ் ஆசிரியர் கூட நியமிக்க பட வில்லை .. அதை காரணம் காட்டி ஏன் optional ஆக கூட தமிழுக்கு இடம் இல்லை ..
நம் தமிழ் மண் வேண்டும் ஆனால் அதில் #தமிழ் கூடாது.. விந்தையாக இது அதிமுக ஆட்சியாளருக்கு ஏன் உறுத்தவில்லை ..
தமிழ் தாழ்ச்சியை தொடர்ந்து செய்யும் #பாஜக வை பேச்ச்சுக்காக கூட எதிர்க்க மறுக்கிறார்கள் ஆளும் அதிகாரகத்தை கையில் வைத்து இருக்கும் அதிமுகவினர் ..
என்ற மக்களின் கேள்வியின் முடிவை நோக்கி தான் இந்த TNElections2021 அமையும் எனறால் அதனை மறுக்க தான் முடியுமா ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக