திங்கள், 11 ஜனவரி, 2021

மக்கள் பாதை அமைப்பில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நீக்கம்

மக்கள் பாதை அமைப்பில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நீக்கம்

dailythanthi.com : . சென்னை, மக்கள் பாதை அமைப்பின் தலைவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி செ.நாகல்சாமி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-மக்கள் பாதை அமைப்பின் வழிகாட்டியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இருந்தார். வழிகாட்டி என்று சொல்வதை விட அவர் மக்கள் பாதை அமைப்பை நிர்வகித்து வந்தார் என்று சொல்வது சரியாக இருக்கும். அந்த அளவுக்கு அவர் மக்கள் பாதை அமைப்பை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் செயல்பாடு எதுவும் சரியில்லை. மாவட்ட, மாநில நிர்வாகிகள் யாரையும் சந்திக்கவில்லை. அவருக்கு நெருக்கமான நிர்வாகிகளை மட்டும் சந்தித்த அவர், மற்றவர்களை புறக்கணித்து வந்தார்.>இதனால் நிர்வாகிகள் பலர் அதிருப்தி அடைந்தார்கள். மேலும் மக்கள் பாதை அமைப்பிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. 

பல முன்களப்பணியாளர்களை இழக்க நேரிட்டது. இதன் காரணமாக நிர்வாகிகளாகிய நாங்கள் ஒருமனதாக முடிவு எடுத்து சகாயத்தை வழிகாட்டுதலில் இருந்து நீக்குகிறோம். அவர் இளைஞர்கள் தேவையில்லை. விசுவாசிகள் தான் தேவை என்று கூறி வந்தார். விசுவாசிகள் என்று யாரை சொல்கிறார்? எதற்காக அதை சொல்கிறார்? என்பது எங்களுக்கு தெரியவில்லை.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய 2 பேரும் அவரை தங்கள் கட்சிக்கு அழைத்ததாக அவரே கூறினார். ஆனால் என்ன காரணத்துக்காக விருப்ப ஓய்வு பெற்றார்? என்று எங்களிடம் சொல்லவும் இல்லை. அதுபற்றி ஆலோசிக்கவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக