திங்கள், 11 ஜனவரி, 2021

குற்றப்பரம்பரை .. சசிகலாவோட மூத்த அண்ணன் பெயர் சுந்தரவதனம். சசிகலாவோட மூத்த அக்காவுக்கு மூணு பசங்க....

Jayalalithaa: The Amma of Tamil Nadu politics - The Hindu BusinessLine
Raja Rajendran : · குற்றப்பரம்பரை கொஞ்சம் உன்னிப்பா வாசிக்கணும். சசிகலாவோட மூத்த அண்ணன் பெயர் சுந்தரவதனம். சசிகலாவோட மூத்த அக்காவுக்கு மூணு பசங்க. அவங்க பேரு தினகரன், பாஸ்கரன், சுதாகரன். சசிகலாவோட இன்னொரு அண்ணன் பெயர் தெரில, ஆனா அண்ணி பேரு இளவரசி. அவங்களுக்கு ஒரு பையன், அவன் பேரு விவேக்.
இதுல இந்த விவேக் மாமானார்தான் இந்தப் பதிவோட ஹீரோ. நெகட்டிவ் ரோல். அவர் பெயர் பாஸ்கர். பாஸ்கரன் இல்ல. பாஸ்கர், கட்ட பாஸ்கர்.
கட்ட பாஸ்கர்ன்னா ஆள் குள்ளமா இருப்பாரோன்னு கேக்குறீங்க. அது குடும்பத்துல வச்ச பெயர் இல்ல. போலிஸ் வச்ச பெயர். ஓ, ஆள் கட்டுமஸ்தா இருந்திருப்பாருன்னு முந்திரிக்கொட்ட போல முந்தக் கூடாது. அந்தாள் கட்டை கடத்தறவன். செம்மரக் கட்டை !
தமிழகத்திலேயே, ஏன் இந்தியாவிலேயே செம்மரக் கட்டை கடத்தல் பிசினசில் டாப் டானாம் !
ஏகப்பட்ட கடத்தல் வழக்கு அந்தாள் மேல பதிவாகியிருந்ததால, ஆந்திரப் போலிஸ் வந்து முந்தா நேத்து அள்ளிக்கிட்டுப் போயிருக்கு !
எவ்ளோவ் சைலண்டா நம்ம கூடவே ஐ மேக்ஸ் தியேட்டர் ஓனர்ன்னு புழங்கியிருக்கானுக பாருங்க ?
இந்த பாஸ்கரோட சம்பந்தியம்மா பெயர் இளவரசி. அதாங்க இவரோட மருமகனோட அம்மா. அட சசிகலாவோட அண்ணி. ஒண்ணா ஒரே ஜெயில்ல கன்னடம் மூணாம் வகுப்பு பாஸ் பண்ணியிருக்காங்க !
ஆச்சா ? சசிகலாவோட மூத்த அண்ணன் சுந்தரவதனம்தான்,
தினகரனோட மாமனார். தினகரன் யாரு ? சசிகலாவோட மூத்த அக்கா பசங்க. அட மாமன் பொண்ண கட்டிக்கிட்டாருய்யா. ரொம்பத்தான் குழம்பிக்கிறீங்க. அதான் உன்னிப்பா படிங்கன்னு மொத வரிலயே டிஸ்கி கொடுத்துட்டேன்ல்ல ?
சசிகலாவோட அண்ணன் சுந்தரவதனம் சமீபத்துல செத்துட்டாரு. பாவம் செத்த கிழமாவது யோக்கியமானான்னு பாத்தா, அது மேல சாவறதுக்கு பத்து நாள் முன்னாலக் கூட ஒரு பிடிவாரண்ட் போட்டிருக்கு கோர்ட். நில அபகரிப்பு வழக்காம் ! அதுவும் அவங்க ஆட்சில இருக்கப்பவே வழக்கு போட்டிருக்காங்க (2015)
தங்கச்சி ஃப்ராடு !
அண்ணன் ஃப்ராடு !
அண்ணி ஃப்ராடு !
அண்ணியோட சம்பந்தார் ஃப்ராடு !
அண்ணன் மருமகன் ஃப்ராடு (20 ரூ டோக்கன் போதும், மவனே அடுத்து ஆர் கே நகர்ல நிப்ப ?)
அண்ணன் மருமகனோட அத்தனை சகோதரர்களும் ஃப்ராடு. ஏகப்பட்ட வழக்குகள் இருக்கு. அதுல நிறைய மத்திய அரசு வழக்குகள். கோடி கோடியா இறைச்சு வாய்தா மேல வாய்தா வேணா வாங்க முடியும். ஆனா ஆப்பு கன்ஃபர்ம் !
மன்னார்குடி மாஃபியான்னு சொல்லாதீங்க புரோன்னு வருவானுக. ஏன்டா மொத்தக் குடும்பமே குற்றப்பரம்பரை போல கம்பி எண்ணிக்கிட்டு கெடக்கு ? ஒவ்வொருத்தன் மேலயும் நூறு வழக்கு ?
திமுக அவங்க மேல போட்டதை விட அதிமுகதான், அதுவும் ஸ்டீல்மங்கைதான் அதிகமா வழக்கே போட்டிருக்கு ?
கோடிகளில் ஃபைன் கட்டியும் ரிலீஸ் தேதி கன்ஃபர்மா தெரில ?
செம்மரக் கடத்தல்ல கூலித் தொழிலாளிகளையெல்லாம் நெஞ்சில் சுடுற ஆந்திர போலிஸ், பாஸ்கர் டிக்கிலயாவது கண்டிப்பா சுடணும். அதுதான் நியாயம். பணத்தை வாங்கிக்கிட்டு நூர் மொய்துவிடக் கூடாது !
அடக்கருமாந்திரம் புடிச்சவனுகளா, இந்தக் கும்பலுக்கா மூணு ஃபயர விட்டுக்கிட்டு இருந்தீங்க, த்தூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக