சனி, 23 ஜனவரி, 2021

ஜோ பைடனின் வரவும் பேர்னி சாண்டர்ஸின் புரட்சிகர சிந்தனையையும் எதை காட்டுகிறது

Image may contain: 1 person, sitting, shoes and outdoor

Rajasangeethan. ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் எதைக் காட்டிலும் அதிக புகழை ஈட்டியிருப்பது பெர்னி சாண்டர்ஸ்ஸின் இந்த புகைப்படம்தான்.
பைடன் மற்றும் அவரின் குடும்பம், ஒபாமா மற்றும் அவரின் மனைவி என அனைவரும் அமெரிக்கா இழந்ததாக(!) நினைக்கும் படாடோப வாழ்க்கையை பிரதிபலிக்கும் படடோப உடைகளை போட்டு விழாவுக்கு வந்திருந்தனர். அந்த விழாவில் கலந்துகொண்ட பெர்னி சாண்டர்ஸ்தான் இப்படி அமர்ந்திருக்கிறார்.
தீவிர கம்யூனிசம் இல்லையெனினும் அமெரிக்காவை கொஞ்சமேனும் அசைத்து பார்க்கும் சோசலிசத்தை பேசுபவர் பெர்னி சாண்டர்ஸ். தற்போது ஜெயித்திருக்கும் பைடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் பெர்னி. வேட்பாளர்களுக்கான போட்டி கட்சிக்குள் நடந்தபோது பெர்னி போட்டியிட்டார். பெரும் ஆதரவு கிடைத்தது. அமெரிக்காவிலிருந்து ட்ரம்ப் மட்டுமல்ல, அதன் பொருளாதார முறையும் வெளியேற வேண்டும் என்றே மக்கள் பெர்னியை ஆதரித்தனர்.
பெர்னியின் அரசியலை பின்பற்றி வரும் AOC வேறு லெவலில் அரசியல் பேசுபவர். முகநூல் உரிமையாளர் மார்க் சக்கர்பெர்க்கை காங்கிரஸ்ஸில் கேள்வி கேட்டு அவர் தெறிக்க விட்டதை பார்த்திருக்கலாம். அத்தகைய AOCயும் பெர்னியும் ஒரே குழாம்தான். லத்தீன் அமெரிக்க அரசியலை ஆதரிப்பார் பெர்னி. ஈவா மொராலஸ்ஸின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு அமெரிக்காவிலிருந்து கண்டனம் தெரிவித்த மிகச் சிலருள் பெர்னியும் ஒருவர்.
பிறகு ஒருநாள் ஒபாமா சென்று பெர்னியை சந்தித்தார். ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியிலிருந்து அவர் விலகக் கோரினார். ஒபாமா பதவியில் இருந்தபோது துணை ஜனாதிபதியாக இருந்த பைடன் வேட்பாளராக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பெர்னிக்கு பெருகி வரும் ஆதரவு பைடனை வேட்பாளராக்காது என ஒபாமாவுக்கு தெரிந்தது. பிறகு மெல்ல மெல்ல பெர்னியும் ஓயத் தொடங்கினார். அதற்கு பின் வேட்பாளர் போட்டி நடந்த ஐயோவா போன்ற மாகாணங்களில் முடிவு வருவது தாமதிக்கப்பட்டது. ஊடகங்கள் தொடங்கி மக்கள் வரை ஜெயித்த பெர்னியை 
 
தோற்கடிக்கப்பட்டதாக காட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது என கோபமாக பதிவிட்டனர். ஒரு கட்டத்தில் அழுத்தங்களுக்கு பெர்னி பணிந்தார். எதிர்பார்த்தபடி அந்த மாகாணத்தில் பெர்னி தோல்வியடைந்தார். AOC பெர்னியின் தோல்வியை ஏற்கவில்லை. இருந்தாலும் கட்சி முடிவுக்காக பணிந்தார். தேர்தல் முடிந்து பைடனின் வெற்றி அறிவிக்கப்பட்டதிலிருந்தே AOC பைடனுக்கு எதிரான சாட்டையை சுழற்றத் தொடங்கிவிட்டார்.
இதுதான் அமெரிக்கா. ஒரு சிறு புரட்சிகர சிந்தனையையும் அனுமதித்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் நாடு. முன்னாள் அதிபரையே அனுப்பி அழுத்தம் கொடுக்கும் நாடு அது. அமெரிக்கா அமெரிக்காவாக இருப்பதில்தான் உலகின் 1% ஆதாயம். ஆனால் அமெரிக்க மக்கள் அதற்கு எதிராக திரும்பிக் கொண்டிருப்பதையே வேட்பாளர் போட்டியில் பெர்னி அடைந்த வெற்றி காட்டுகிறது.
 
இத்தகைய சூழலில் நடந்த பைடனின் பதவியேற்பு விழாவில்தான் பெர்னி இப்படி அமர்ந்திருக்கிறார். அவர் உடையில் படாடோபமில்லை என்பதாலும் விழாக்கோலத்தில் அவர் இல்லையென்பதாலும் சில இடங்களில் கேலி செய்யப்பட்டு மீமாக்கப்படுகிறார். நம்மூர் பிரியங்கா சோப்ரா எல்லாம் அமெரிக்க நடிகை ஆகிவிட்டோம் என்பதாலேயே பெர்னியை காமெடி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் பெர்னியை விரும்பும் பலர் பெர்னியின் இந்த தோற்றமே அமெரிக்கா விரும்பும் தோற்றம், அரசியல் என பதிவிட்டு வருகின்றனர்.
குளிருக்கு ஏதுவான எளிமையான ஒர் ஆடை. கைகளை மறைக்க கையுறைகள். அந்த கையுறைகளையும் ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியை பெர்னிக்கு பரிசளித்தவையாம். இதைவிட மனிதனுக்கு என்ன படாடோபம் தேவைப்பட்டுவிடப் போகிறது?
Rajasangeethan... பதிவிலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக