சனி, 23 ஜனவரி, 2021

Fefsi விஜயன்.. மலையாள கதாநாயகன் ஜெயனின் விபத்தோடு கலங்கிய விஜயனின் கதை

Image may contain: 1 person

Selvan Anbu :  · ஒரு புகழ் வாய்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஒரு மாநில திரைப்படத்தில் டைட்டிலில் பெயர் வந்து 40 வருஷமாச்சு... 40 வருஷத்துக்கு முன்னே அவர் பெயர் டைட்டிலில் வந்ததோடு சரி. அதன் பின் யாருமே அவரை கூப்பிடலை. ஏன்?யார் அவர்? இன்று மிகப்பெரிய ஸ்டண்ட் டைரக்டர். அன்று அவர் பெயர் விஜய். விஜய் தந்தை சுப்ரமண்யன் பெரிய ஸ்டண்ட் டைரக்டர். அதுவும் எம்.ஜி.ஆரோட ஸ்டண்ட் மாஸ்டர். அவர் புகழ் பெற்றது அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி.ஆர் புலியோடு சண்டை போட்ட போது. அதை செய்தது விஜய்யோட அப்பா.
விஜய் 17 வயதிலேயே ஸ்டண்ட் நடிகராயிட்டார். படிப்படிப்படியாக வளர்ந்து ஸ்டண்ட் மாஸ்டராக 80 களில் வளர்ந்தார். 1980ல் அவருக்கு மலையாளத்தில் ஒரு படத்துக்கு அழைப்பு வந்தது. பொதுவாக அன்று மலையாளப்படங்களுக்கு தியாகராஜன் என்பவர் தான் மாஸ்டராக இருப்பார்.
விஜய்க்கு இந்த வாய்ப்பு வந்ததும் ஹீரோ யார் எனப்பார்த்து விசாரித்தால் ஆச்சர்யம். அந்த ஹீரோ பல ஸ்டண்ட்களை டூப்பில்லாமல் செய்தவர். தலையுயர்த்தி பிளிறும் யானையின் தந்தங்களில் தொங்கியவர் என அறிந்ததும் விஜய் ஒப்புக்கொண்டார். மேலும் அதன் ஷூட்டிங் சென்னையில்.
சோழவரம் பழைய விமான ஓடுதளப்பகுதியில் ஷூட்டிங். அதுவும் ஹெலிகாப்டரோடு. அந்த காட்சியில் நாயகன் ஜெயன். அவர், மது, கே.ஆர்.விஜயா, சுகுமாரன், பாலன்.கே.நாயர் எனஎல்லோரும் ஆஜர். ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்தாயிற்று. அன்று பார்த்து சென்னையில் நல்ல மழை. விஜய் நாயகனைப்பார்த்து இன்று வேண்டாம் ஷூட்டிங் எனச்சொன்னதும் ஜெயன் சம்மதிக்கவில்லை. சோழவரத்தில் மழை இருக்காது வாங்க என்றார் ஜெயன்.
சொன்னது போல் மழை இல்லை. ஷூட்டிங் தயாரானது. ஹெலிகாப்டரில் வில்லன் பாலன்.கே.நாயர் தப்பிக்கும் போது பைக் ஓட்டி சுகுமாரன் வர பின் சீட்டிலிருந்து ஜெயன் ஹெலிகாப்டர் Foot padஐ பிடித்து தொங்கி சண்டை செய்து பாலன்.கே.நாயரை இழுத்து கீழே தள்ளவேண்டும். பி.என்.சுந்தரம் டைரக்டர். ஷாட் பக்காவா வந்தது. சுகுமாரனின் பைக் பின்சீட்டிலிருந்து ஜெயன் ஹெலிகாப்படரை தொட்டு ஸ்டண்ட் செய்து நாயரைதள்ளி விட ஷாட் ஓகே. கைதட்டல் விண்ணைப்பிளந்தது. ஆனாலும் ஜெயன் வந்து மாஸ்டர் இன்னொரு ஷாட். எனக்கு திருப்தியில்லை என நிர்ப்பந்திக்க விஜய் இரண்டாவது முறை ஷூட் செய்ய இம்முறை ஜெயன் ஹெலிகாப்டர் Foot pad ஐ பிடித்து தன் இருகால்களையும் அதனோடு பின்னிவிட ஹெலிகாப்டர் பேலன்ஸ் இழந்துசெங்குத்தானது. ப்ரப்பெல்லர் தரையில் மோத பெரும் விபத்து.
விஜய் செய்த ஸ்டண்ட்டில் விஜய் கண் முன்னே ஜெயன் முதுகு தரையில் மோத விஜய் 'ஜெயன் கை விங்க..கை விடுங்க' எனக்கத்தியும் ஜெயன் தன் பிடியை விடாததால் ஹெலிகாப்டர் நொறுங்கியது. ஜெயன் இறந்து போனார்.
ஸ்டண்ட் கலைஞனான விஜய்க்கு பதட்டத்தோடு மனநிலையே தாறுமாறானது. ஹாஸ்பிட்டலில் பிழைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டு ஜெயன் இறந்த செய்தி கேட்டு விஜய் உடைந்து போனார்.
அதோடு அவரின் மலையாள திரையுலக வேலைகள் முற்று பெற்றன. விஜய் நடுங்கும் ஒரே சம்பவம் இது. அவர் மனநிலை சரியாக ஆறேழு மாதங்களுக்கு மேலானது.
மலையாளத்திரையுலகம் ஜெயன்-நடிகை லதா-எம்ஜிஆர்-அப்பா சுப்ரமண்யன்-மகன் விஜய் என தவறான கணக்கீடுகளால் அவரை ஒதுக்கி வைத்தது.
விஜய் என்கிற அந்த நடுங்கும் கலைஞன்வேறு யாருமல்ல...
நம்ம Fefsi விஜயன் தான்...
பின்னாளில் அவர் 'தில்' படத்தில் 'மச்சான் மீச வீச்சருவா' பாடலில் வந்த போது அவர் தன்னை மிக மிக உற்சாகவானாக காட்டிக்கொண்டிருப்பார்.
ஆனால் அவர் மனதின் தீராத வடு 'ஜெயன்' என்கிற நடிகன் அதுவும் மலையாள 'சூப்பர் ஸ்டார் ஜெயன்' அவர் கோரியோகிராபியில் இறந்தது...
'கோளிளக்கம்' என்கிற அப்படத்துக்கு பிறகு 40 வருடமாக யாருமே அவரை கேரளத்திலிருந்து கூப்பிடவேயில்லை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக