வெள்ளி, 4 டிசம்பர், 2020

கடைசி தலைமுறை அரசுமருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவத்துறை டெக்னிஷியன்கள் ....அடுத்த அதிர்ச்சி..!

Maha Laxmi : · அடுத்த அதிர்ச்சி..! இது உண்மையான தெரியவில்லை அப்படி இருந்தால் மாபெரும் கொடுமை கடைசி தலைமுறை அரசுமருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவத்துறை  டெக்னிஷியன்கள் அனைத்து பிரிவு மருத்துவ ஊழியர்களும் இப்போது  இருப்பவர்கள் தானா?

மத்திய அரசின் #மாபெரும்திட்டங்கள்!    மருத்துவ கல்விக்கு பிறகு  அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா நடத்தப்போகும் மோடி அரசின் புண்ணியங்கள்: 

இந்தியாவின் எட்டு பெரும் நகரங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் உள்ள வளாகத்தில் 50 அல்லது 100 படுக்கை வசதிக்கொண்ட கட்டிடத்தை #தனியாருக்கு 30வருடங்களுக்கு கொடுக்க வழிவகை செய்யும் ஒரு ஓப்பந்தத்தை அனைத்து மாநில அரசுக்கும் மத்திய நிதி ஆயோக் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனுப்பியிருக்கிறது. 

இதன் மூலம் இந்திய ஒன்றியத்தில் பெரும்பாலான மக்கள் நம்பிக்கொண்டு இருக்கும் அரசு மருத்துவமனைகளையே இல்லாமல் செய்யும் வேலையை மோடி அரசு செய்ய துணிந்திருக்கிறது.

இந்த ஓப்பந்ததில் உள்ள ஷரத்துக்கள்: 
 
1.மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் உள்ள இடத்தில் தனியாருக்கு 50 அல்லது 100 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடத்தை அந்தெந்த மாநில அரசு கொடுக்க வேண்டும். அதாவது 50 படுக்கை வசதிக் கொண்ட மருத்துவமனையை தனியார் கட்ட முன் வந்தால் அதற்கு அரசு மருத்துவமனை வாளாகத்திலுள்ள இடத்தில் 30,000 சதுர அடி இடமும், 100 படுக்கைவசதிகொண்ட மருத்துவமனையென்றால் 60,000 சதுர அடி இடமும் மாநில அரசு கொடுக்க வேண்டும். மேலும் மருத்துவமனை கட்டத்தேவையான பணத்தின் ஒரு பகுதியையும் மாநில அரசே தனியாருக்கு ஒதுக்க வேண்டும்.
 
2.மாவட்ட மருத்துவமனைகளிலுள்ள இரத்த வங்கி சேவைகள், ஆம்புலன்ஸ் சேவைகள், பிசியோதெரபி சேவைகள், மருத்துவ கழிவுகள் அகற்றும் முறை, பார்க்கிங் வசதி, மின்சாரம், பிணவறை, நோயாளிகள் பணம் செலுத்தும் கவுண்டர் மற்றும் செயூரிட்டி போன்ற அனைத்தையும் தனியாரும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
 
3.அரசு காப்பிடு திட்ட பயணாளிகளுக்கு இங்கு மருத்துவம் பார்க்கப்படும். ஆனால் படுக்கைக்கு (BED) பணம் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
4.மாநில காப்பீட்டு மற்றும் சுகாதார திட்டங்களின் மூலம் பயன்பெறும் நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படமாட்டாது. அப்படியே அவர்கள் வந்தாலும் முழுக்கட்டணமும் செலுத்தித்தான் பயன்பெறமுடியும்.
அதாவது அரசு மருத்துவமனை இடத்தையும் பெற்றுக்கொண்டு மருத்துவமனை கட்ட நிதியையும் அரசிடமே பெற்றுக்கொண்டு அரசு மருத்துவமனையிலுள்ள அனைத்து வசதிகளையும் வாட்ச்மேன் முதற்கொண்டு பெற்றுக்கொண்டு அரசு உதவிபெறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டார்களாம்
பின் எதற்கு இந்த புதிய நல்ல ஒப்பந்தமென்றால். அரசு மருத்துவமனை என்ற ஒன்றையே இல்லாமல் செய்ய வேண்டுமென்பது தான் இதன் பின்னுள்ள மோசமான அரசியல். 
ஏற்கனவே 2012இல் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது புஜ் அரசு மருத்துவமனையை (Bhuj’s government hospital) அதானி குழுமத்தின் மருத்துவ கல்லூரிக்காக 99வருடத்திற்கு குத்தகைக்கு விட்டவர்தான் இப்போது நாட்டிலுள்ள ஓட்டுமொத்த மாவட்ட மருத்துவமனைகளையும் தனியாருக்கு கொடுக்க முன்வருகிறார்.
 
ஏற்கனவே ’நீட்’ எனும் சட்டத்தினால் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்பட்ட மோடி அரசு. இப்போது இந்த புதிய ஒப்பந்தத்தால் #அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு கொடுக்க வேலை செய்கிறது.
இந்த ஒப்பந்தத்திற்கு  இரண்டு வார காலத்திற்குள் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று நிதி அயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்திருக்கிறார். 
இந்த ஒப்பந்தத்தை தமிழக அரசு ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க வேண்டும். அதுபோலவே எல்லா மாநிலங்களும் இதனை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கவேண்டும். இல்லையென்றால் இதனால் வரக்கூடிய விளைவுகள் இந்திய சமூகத்தில் மிக மோசமானதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக