அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்குப் பணி வழங்க உத்தரவிட்டார். ஆனால், நீதிபதியின் ஆணையை ரத்துசெய்யக் கோரி ஆயுதத் தொழிற் சாலை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதிகள், இப்படியொரு கேள்வியைத் தமிழக அரசை நோக்கி எழுப்பியிருக்கின்றனர்.
``வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களின் தாய்மொழியான இந்தியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பணி நியமனம் பெறுவ து எப்படி..? பணித் தேர்வுகள் நேர்மை யாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும்.''
நீதிபதிகள் ஜெயபிரகாஷ் நாராயணன்
இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்பையா "ஆயுதத் தொழிற்சாலை பணி யில் 140 பணியிடங்களில் 50 சதவிகிதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள்” என்று கூற, அப்போது உடனடியாகக் குறிக்கிட்ட நீதிபதி என். கிருபாகரன், ``தமிழ்நாட்டுக்கு என்ன பிச்சை போடுகிறீர்களா?’’ என்று மிகக் காட்டமாகக் கேட்டிருக்கிறார்.
நீதிபதிகள் இந்த விஷயத்தில் இவ்வ ளவு தீவிரமாகக் கருத்து தெரிவிக்கக் காரணம் என்ன?
``வட மாநில இளைஞர்கள், அரசுத் தேர்வு களில் இந்தியில் ஃபெயிலாவதும், தமிழில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பாஸாவதும் இயல்பாகவே இந்தத் தேர்வு முறைகளிலுள்ள முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகின்றன. இங்கு இருக்கும் அரசுத்துறைகளில் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்க ளை உள்நுழைத்துவிடுகின்றனர். இந்த முறைகேடுகள் அரசியல் காரணங்க ளுக்காகவும் நடைபெறுகின்றன. தவிர, பிற மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரி கள் இது போன்ற முறைகேடுகளுக்குத் துணைபோகின்றனர்...
முதன் முறையாக ஒரு நல்ல செயதி
பதிலளிநீக்குFirst our house after others so pls give jobs in tamilan only
பதிலளிநீக்குTamilanda
அருமை
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு