திங்கள், 21 டிசம்பர், 2020

ஸ்டாலின் மற்றும் 4 மாநில முதல்வர்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்

  dinakaran  : கொல்கத்தா: மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் 4 மாநில முதல்வர்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் நட்டாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறியதாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவளித்த மு.க.ஸ்டாலின் மற்றும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக