திங்கள், 21 டிசம்பர், 2020

எம்ஜியாரின் உள்ளும் புறமும் ( 1 ) .கவிஞர் கண்ணதாசன் . அரங்கமும் அந்தரங்கமும் .


 என் இனிய நண்பர்களே எம்ஜியாரை பற்றிய ரகசியங்கள்      எம்ஜியாரை பற்றி என்னென்ன ரகசியங்களை சொன்னால் அவர் பதறுவார் துடிப்பார் என்பது  எனக்கு தெரியும்.    அவரது அந்நிய செலாவணி ஊழல் பற்றி நாலே நாலு வரிகள்தான் சொன்னேன் .

அதற்கு அவரது கறுப்பு பணத்தால் நடத்தப்படும் பத்திரிக்கை மான்குட்டி மீது பன்றி ஏறி விழுவது போல விழுந்திருக்கிறது.

ஆகவே அவரது எல்லா ரகசியங்களையும் வெளியிடவேண்டிய அவசியம் எனது கடமையாகிறது.   அவர் கூட்டம் என்னை ஏசுவது போல் முட்டாளே நாயெ கழுதையே என்று நான் அர்ச்சிக்க போவதில்லை.

பாவம் . அந்த பிராணிகளுக்கு நான் அவமானத்தை தேடி தரப்போவதில்லை.   ஒரு நடிகனுக்கு வேண்டிய திறமையோ தலைவனுக்கு வேண்டிய பொறுமையோ நிதானமா இல்லாதவர் அவர்.      இன்றைக்கும் அவரை பகுத்தறிவு இல்லாத ஏழை மக்களும் படித்த முட்டாள்கள்  மட்டுமே நம்புகிறார்கள்.   தமிழ்நாட்டின் நூறுக்கணக்கான கல்லூரிகளில் ஒரு கல்லூரியில் கூட அவரை ஆதரிக்கும் மாணவர்கள் வெற்றி பெறவில்லை.

நடந்து முடிந்த தேர்தலில் கூட படித்தவர்கள் ஓட்டும் சிந்திக்கும் திறனுடையவர்கள் ஓட்டும் அவருக்கு விழவில்லை.    கருத்து பிரசாரம் தீவிரமாக இல்லாத இடங்களில் அவர் காலூன்றி உள்ளார்.   

 

ஆகவே அவர் படங்களில் நடிப்பது போல நிஜ வாழ்க்கையிலும் யோக்கியரா என்பதை படிக்காத பாமர மக்களுக்கும் எடுத்து சொல்வது எமது கடமையாகிறது..


அவர் நன்கொடை கொடுத்த விபரங்கள்  பலரிடம் வாங்கிய கறுப்புபணத்தை அபகரித்த விபரங்கள் .சந்திரபாபுவை படுத்திய பாட்டு.

அவரது ஆணவத்தால் பாதியில் நின்று போன படங்கள்.

அந்த படங்களால் தங்களின் வாழ்வையே சீரழித்து கொண்ட தயாரிப்பாளர்கள்,

அவரது வருமானவரி லீலைகள் . முழுவதையும் சொல்கிறேன்.

ஒழுங்காக பணம் சேர்த்து அவரை வைத்து படம் எடுக்க ஆரம்பித்த கடன்காரனாகி துடித்து கொண்டிருக்கும் அசோகனில் இருந்து  எடுத்ததை முடிக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர் வரையில்  விபரங்களை உங்களுக்கு தருகிறேன் .

 இன்னொன்று ,

அரசியலில் அந்தரங்கத்தை வெளியிடுவது உதவாது என்று கருதுபவன் நான் .

ஆனால் ஒரு நபரை உலகம் அறிந்து கொள்வதற்கு அது தேவைப்படுகிறது .

16 வயது என்று சொல்லி ஒரு இளம்பெண் வந்தால் அவளை அவர் எப்படி ஒதுக்கி கொண்டுபோவார் என்பதற்கு அன்றிலிருந்து இன்றுவரை நடந்த விஷயங்களை நாகரீகமான நடையிலேயே நான் விவரிக்கிறேன் .

நாணயமில்லாத ஒருவர் நாணயஸ்தன் போல காட்சி அளிக்கிறார்

  நடத்தை கெட்ட ஒருவர் உத்தமனாக வேஷம் போடுகிறார்.

நான் தொடர்ந்து விவரிக்கப் போவதை அவரும் வரவேற்க வேண்டும்.

ஏனென்றால் என்னைப்பற்றிய எந்த ரகசியங்களும் வெளிப்படுவதை உற்சாகத்தோடு  வரவேற்பவன் நான் 

நான் அவரது கொடை விபரங்களையும் வாங்கிய விபரங்களையும் முதற் பகுதியாக   வெளியிடுகிறேன் .

 அரங்கமும் அந்தரங்கமும் .

அந்தரங்கத்தில் ஒவ்வொரு மனிதனிடத்தும் பலவீனம் இருக்கிறது.

ஆனால் அந்த பலஹீனங்களை நான் ஒப்புக்கொள்வது போல் எல்லோரும் ஒப்புக்கொள்வதில்லை.

அரங்கத்தில்  ஏறி நான் உத்தம புத்திரன் சத்திய சீலன் என்று விட்டு தனிப்பட்ட வாழ்க்கையையே ஆபாசமாக நடத்தி கொண்டிருப்பவர்கள் பலர் .

அவர்களிலே  எம்ஜியாரும்  ஒருவர்.

அவரது ரகசியங்களை நான் வெளியிடுவதற்கு காரணம் அவரது ரகசியங்களை உலகம் அறிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் .

ஏதோ இரண்டொரு வெற்றிகளை குருட்டு தனமாக பெற்றதிலிருந்து எம்ஜியாரின் ஆணவம் அளவு மீறி போய்விட்டது . போய் கொண்டிருக்கிறது.

தமிழ் பெண்களை கேலி செய்கிறார் . கருணாநிதி காலம் முடிந்து விட்டது என்கிறார்.

இவர்களுக்கு எல்லாம் என்ன யோக்கியதை இருக்கு என்கிறார்.

பிற மொழிகளில் இவரை ஒரு துணை நடிகராக கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

எந்த அரசியல் கட்சியிலும் இவரை ஒரு தொண்டனாக கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இங்கே இவர்தான் பெரிய நடிகர் ., அரசியல் தலைவர்.

இந்த நாட்டில் தமிழர்கள் மட்டுமே அப்பாவிகளாக இருப்பதால் இவரது ஆணவம் எல்லை மீறி போய் விட்டது.

இங்கே மாபெரும் தலைவர்களின் அந்தரங்கா சுத்தியை கூட அறியாதவர்கள் அவர்களை ஒதுக்கி விட்டு எம்ஜியாரை ஆதரிப்பதால் வந்த வினை,

பெரும் தலைவர்களுக்கு அவமானமாக முடிந்திருக்கிறது.

ஆகவே தவறான உருவங்களை சிதைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

எம்ஜியார் கணக்கில் வாங்குவது போல் ஆறுமடங்கு  பணம் கறுப்பில் வாங்குகிறார்.

ஆனால் கறுப்பு பணங்களை  கண்டு பிடிக்கவேண்டும் என்று அவரே மேடையில் பேசுகிறார்.

எந்த தொண்டனிடம் பணம் வாங்கி அவர் இன்று கட்சியையும் தேர்தல்களை நடந்துகிறார்.

இன்று சில மாமன்களும் சில மாப்பிள்ளைகளும் கேரளாவில் இருந்து வந்திருக்கும் ஒரு ஆயுதமும் தங்களிடமுள்ள உள்ள கறுப்பு பணத்தையும் கொடுத்து விளையாட சொல்லி இருக்கிறார்கள்.

சுமார் இருப்பது ஆண்டுகளாக கோடிக்கணக்கில் கறுப்பு பணத்தில் விளையாடுகிறவர் அவர்.

சிரிக்கும் சிலை என்றும் குமாரதேவன் என்றும் நின்று போன பல படங்களை நீங்கள் அறிவீர்கள்.

அவற்றிலே அவர் வாங்கிய  பணத்திற்கு கணக்குஉண்டா?

ஒரு மணி நேரம் கூட அவர் அந்த படத்தில் நடிக்கவும் இல்லை பணத்தை திருப்பி தரவும் இல்லை.

என்னுடைய அவசரத்துக்கு பணம் கேட்டல் கடன் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டுதான் பணம் தருவார்.

அவரது நன்கொடை என்பது அடுத்தவர்களை விலைக்கு வாங்குவதற்கே.

அனாமத்தாக அவரிடம் வந்து விழுந்த பணம் லட்சக்கணக்காகும்.

மாட்டி வீடு ஏழை என்ற படத்துக்காக சந்திரபாபு கொடுத்த பணத்தை அவர் திருப்பி தரவே இல்லை.

சந்திரபாபுவின் வீடு ஏலம் போய்விட்டது.

கோவையில் ஆடைகள் தைப்பவராக இருந்த ஒருவர் எம்ஜயரை வைத்து படம் எடுத்து இன்சால்வன்ஸி ஆனார்.

 எம்ஜியாரை அவர் பார்க்க வந்த போது  கழுத்தை பிடித்து வெளியே தள்ள சொன்னார்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு நான் ஒரு பெண்ணின் கதை என்ற பெயரில் ஒரு படம் எடுத்து கொண்டிருந்தேன் .

அதில் நடிப்பதற்காக ஜெயலலிதாவை அந்த படத்தை பார்க்க சொன்னேன் . அவர் அதை பற்றி எம்ஜியாரிடம் சொல்லி இருக்கிறார் .

உடனே எம்ஜியார் எனக்கு போன் செய்து அந்த கதை எனக்கு வேணுமே என்றார்.

அதற்கு செலவான பணத்தை கொடுத்துவிடுவதாக சொன்னார்.

மூன்றில் ஒரு பங்கு கொடுத்தார் . இன்னும் பாக்கியை  கொடுக்கவில்லை..

அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் சண்டை வந்து விட்டதால்  என் கழுத்தை அறுத்துவிட்டார்.

நான் அவருக்கு தரவேண்டியதை போல அவர் எனக்கு தரவேண்டியது  மூன்று மடங்காகும்.

அன்றில் இருந்து இன்றுவரை அவரால் கழுத்து அறுக்க பட்டவர்கள் பலர்.

வெளி உலகுக்கு அவரது கொடை   தெரிகிறது.

இந்த விஷயங்களும் தெரியவேண்டாமா?

அவரால் கெட்டுப்போன சந்திரபாலு ரத்த வாந்தி எடுத்து செத்து போனார்/

ஏன் சந்தியாவும் (ஜெயலலிதாவின் தாயார் ) அப்படித்தானே செத்து போனார்? 

இன்னும் என்னை அவர் கொலை செய்யவில்லை..  அவ்வளவுதான்.

அவரது பின்னணியில் நூறுக்கணக்கான  பயங்கர சம்பவங்கள்   அடங்கி இருக்கின்றன.

அதில இதுவும் ஒன்று.

திருவான்மியூரில் அவர் நடத்திய மாநாட்டில் இரண்டு லட்சம் ரூபாய் மிச்சம் என்றாரே ? அதற்கு கணக்கு காட்ட சொல்லுங்கள் பார்ப்போம்?

  அன்று காலையில் ஒரு கம்பனியில்தான் பணம் வாங்கினார் என்று சொல்லப்பட்டது 

இதுதான் அதுவா அல்லது உண்மையிலே வசூலானதா? 

ஏதோ - தெரியாமல் கேட்கிறேன் . சொல்ல சொல்லுங்கள்.

இதை எல்லாம் சொன்னால் சிமி கிராக்கான ஒரு எம்பிக்கு கோபம் வருகிறது.

டெல்லியில் முந்தய அமைச்சருக்கு தென்னாட்டு சரக்குகளை சப்பிளை செய்த மைனர் மாமாவுக்கும் கோபம் வருகிறது.

வரட்டும்.

சூடு ஏற  ஏறத்தானே இரண்டு பக்க ரகசியங்களும் அம்பலமாகும்.

சாவுக்கே கூட நான் தயாராகத்தான் இருக்கிறேன்.  ... தொடரும்   இரண்டாவது பாகம் 

 

 

எம்ஜியாரின் உள்ளும் புறமும் ( 1 ) .கவிஞர் கண்ணதாசன் . அரங்கமும் அந்தரங்கமும் .  

 எம்ஜியாரின் உள்ளும் புறமும் (2 ) ...கவிஞர் கண்ணதாசன் நாங்களே தேடிக்கொண்ட வினை

எம்ஜியார் உள்ளும் புறமும் -3 ! கவிஞர் கண்ணதாசன் .. மலையாளிகள் பற்றி   

எம்ஜியார் உள்ளும் புறமும்- 4 - கவிஞர் கண்ணதாசன் - பாவம் வெங்கிடசாமி - கோல்டன் நாயுடு !    

எம்ஜியார் உள்ளும் புறமும் 5 - கவிஞர் கண்ணதாசன் S .S .ராஜேந்திரன்

எம்ஜியார் உள்ளும் புறமும் 6

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக