திங்கள், 30 நவம்பர், 2020

சீமானின் துளி திட்டம் .. சதுரங்க வேட்டை பாணி பகல் கொள்ளை

Image may contain: 1 person, text that says 'தமிழர் மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் கட்சி வளர்ச்சி நிதியாக வழங்கும் துளி திட்டம் thuli.naamtamilar.org புதிய இணையதளம் தொடக்கம் துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு! நாம் தமிழர் கட்சி- தகவல் தொழில்நுட்பப் பாசறை'  கபிலன் சிங்காரவேலு : · தடா பேசியதில் இருந்து நான் பல நாட்களாக சொல்லி வந்த ஒரு விடயம் தெளிவாகிறது ஈழ தமிழனின் தயவு இனி சீமானுக்கு தேவை இல்லை என்பது தான் அது இதை இந்த பதிவில் பிறகு விளக்குகிறேன்.

 சீமான் தொடங்கிய துளி திட்டம் அதாவது மாதா மாதம் 1000 பேர் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் ( MLM சதுரங்க வேட்டை படம் போல தான் )

 1000 பேர் x1000 ரூபாய் = 1000,000 ரூபாய் வருவாய் ஒரு மாதம் ஒன்றுக்கு ஒரு மாத வருவாய் 1000,000 ரூபாய் x 12 மாதம் = 12,000,000 ரூபாய் . ( மாதம்  பன்னிரெண்டு இலட்ச்சம் ரூபாய்)

 எதுக்கு இவ்ளே காசு இதுல 1000 பேர்  மட்டும் இனைய போவதில்லை குறைந்தது 5000 பேர் இணைவார்கள்               இது எல்லாம் இருந்தும் ரூவா 100 முதல் 10000 வரை எல்லாத்துக்கும் நிதி வசூல் செய்கிறார்.

யாரிடம் எல்லாம் நிதி வசூலிக்கிறார் என்று பாருங்க எல்லாரும் பெரும்பாலும் இளம் வயதில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ( வெளி நாட்டில் மாத சம்பளம் வாங்கும் தமிழக மக்கள் ) அவர்கள் உழைத்து சம்பாரிப்பதில் ஒரு சிறிய தொகையை பிராபகரன் ஈழம் என்று சொல்லி வாங்கிக்கொள்கிறார் .
சீமானுக்கு என்ன வருமானம் வீட்டில் உள்ள செலவுகள் எல்லாம் என்ன இதை எல்லாம் அவர் எதில் இருந்து எடுத்து செலவு செய்கிறார் என்பது எல்லாம் புரியாத புதிர் தான்     சீமானின் துளி திட்டம் .. சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில்  பகல் கொள்ளை
முன்பு சொல்லியது போல வெளி நாட்டு நிதி குறைந்த உடனே தன் செலவை சமாளிக்க சீமான் தொடங்கிய திட்டம் தான் துளி திட்டம் இனி அவர்களை நான் எதிர் பார்க்க தேவை இல்லை அவங்க தயவில் கட்சியும் நான் நடத்த தேவை இல்லை என்ற சூழலில் கட்சியின் பொது செயலாளர் தடா மூலம் இந்த கருத்தை மேடையில் பதிய வைக்கிறார் சீமான் இன்னும் சொல்லப் போனால் சீமான் கட்சியில் யார் பொருளாளர் யார் நிதியை கையாள்கிறார்கள் என்ற எந்த தகவலும் எங்குமே வெளிப்படையாக இல்லை.

1 கருத்து:

  1. இதே கேள்விய தீம்கா கிட்டேயும் .மற்ற எல்லா கட்சிகள்டயும். நிதி எங்கிருந்து வருதுன்னு. கேளுங்க. 😀😀😀

    பதிலளிநீக்கு