திங்கள், 30 நவம்பர், 2020

அரசியலுக்கு உகந்த ஐந்து வகையான வழிபாட்டு முறைகள் (அதிமுக அந்தாதி)

Add caption

1 சகஜ நமஸ்காரம்   குறிப்பிட்ட இலக்கு உங்களை தாண்டி போகும்போது சுமார் 45 டிகிரி வளைந்து கரங்களை கூப்பி கண்ணீரும் கொஞ்சம் தழும்ப வணங்குவது
2 பூமி நமஸ்காரம் : . இது ரொம்ப விசேஷமானது உடலின் எல்லா அங்கங்களும் நிலத்தில் படும்படியாக கீழே விழுந்து முடிந்தால் புரண்டு புரண்டு கரங்களை உயர்த்தி பிடித்து வணங்குவது
 3 ஆகாய நமஸ்காரம் :  ... நீங்கள் வணங்கும் உங்கள் குலதெய்வம் ஹெலிகாப்டரில் வரும்போது நின்று கொண்டு இரு கரங்களையும் உயரே கூப்பிக்கொண்டு . வெயிலின் சுவாலை கண்ணை சுட்டாலும் விழி மூடாது முடிந்தால் கண்ணீரும்  தழும்ப வணங்குவது
 4  சக்கர நமஸ்காரம் . இதுவும் மிகவும் தெய்வீகம் வாய்ந்தது .உங்க ஆத்மீக ஆப்ஜெக்ட் காருக்குள் இருந்து கொண்டு உங்கள் கண்ணனுக்கு தெரியாமல் கருப்பு டின்டட் கண்ணாடியால் மறைந்து கொண்டால் அந்த காரின் சக்கரத்தையே தெய்வமாக பாவித்து கரங்களால் ஒற்றி கண்ணில் வைத்து வணங்குவது.
5  அங்கபிரதட்சண நமஸ்காரம் : . உங்கள் தெய்வத்தின் பாதாதி வடிவங்களையே அந்த தெய்வத்தின் திவ்விய முகமாக கருதி வழியில் தடைகளாக ஆடும் ஏனைய மனித பதர்களின் கால்களை தவிர்த்து கொண்டு ஒற்றை மனதோடு தவழ்ந்து சென்று கால்களை வணங்குவது .. 
அதே கால்களை பிற்காலத்தில் வார வேண்டி ஏற்பட்டால் வேறு அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு உரிய தெய்வத்தை தேட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக