செவ்வாய், 6 அக்டோபர், 2020

திமுக குறைந்தது 180 இடங்களில் போட்டியிட வேண்டும்.. கூட்டணியை வலுவாக அமைத்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி சாத்தியம்

Chozha Rajan : திமுக  தலைவர் தளபதி பார்வைக்கு.. திமுக தலைவர்

ஸ்டாலினை சந்திப்பதற்கு முன் தங்களைச் சந்திக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கும்... கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் உதயநிதி மற்றும் அன்பில் பொய்யாமொழி தரப்பில் நிர்பந்தம் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு பரவுகிறது... இது நல்லதல்ல. இதில் உண்மை இருக்காது என்று நம்புகிறேன்... பொருளாளராக எ.வ.வேலு வரப்போகிறார்... என்றும் அவருக்கு துர்கா ஸ்டாலின் ஆதரவு இருப்பதாகவும் ஒரு வதந்தி இப்படித்தான் பரவியது... துர்கா சொல்வதையும், சபரீசன் சொல்வதையும் ஸ்டாலின் கேட்கிறார் என்று பரவிய வதந்தி பொய் என்றாகியது.

இப்போது உதயநிதி கூட்டணி விஷயத்தில் அதிகமாக மூக்கை நுழைப்பதாக கூறுகிறார்கள்... அதீதமான நம்பிக்கை பள்ளத்தில் தள்ளிவிடும் அபாயம் இருக்கிறது...     1996 தேர்தலில் ரஜினி இல்லாவிட்டாலும், மூப்பனார் இல்லாவிட்டாலும் ஜெயலலிதாவுக்கு எதிரான அலை திமுகவுக்கு வெற்றியைக் கொடுத்திருக்கும். ஆனால், கலைஞர் கூட்டணியை அமைத்தார்... சிறிய விஷயங்களைக்கூட நாம் தவறவிடக்கூடாது...  அதேசமயம் எதார்த்த நிலையை அனுசரித்து திமுக குறைந்தது 180 இடங்களில் போட்டியிட கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கூட்டணியை வலுவாக அமைக்கும்பட்சத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றி என்பது சாத்தியமாகும். ஒற்றுமை முக்கியம். அதுவும் பாஜகவுக்கு எதிரானவர்களை இணைத்து செயல்படுவதில் மிகவும் கவனம் தேவை... 2006 முதல் 2011 வரை பாமக கொடுத்த குடைச்சல் கொஞ்சநஞ்சமல்ல என்பதை நினைவுபடுத்துகிறேன்... கம்யூனிஸ்ட்டுகளும் முஸ்லிம்களும் ரொம்பவும் முக்கியம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக