செவ்வாய், 6 அக்டோபர், 2020

JusticeForKalaivani திண்டுக்கல் 12 வயது சிறுமிக்கு கரண்ட் கொடுத்து பாலியல் கொலை செய்த +2 மாணவன் விடுதலை

Maveeran Manikandan : JusticeForKalaivani திண்டுக்கல்லில் 12 வயது சிறுமிக்கு கரண்ட் கொடுத்து பாலியல் கொலை செய்த +2 மாணவன் வழக்கு* 


 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்துள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம். முடி திருத்தும் தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி லட்சுமி . இவர்களுக்கு 12 வயது நிரம்பிய மகள் இருந்தார் . இந்நிலையில் சென்ற ஆண்டு ஏப்ரல் 15 அன்று கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை எதிர் வீட்டில் உள்ள கிருபானந்தன் ( 19 ) பாலியல் பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்தார் . இதுதொடர்பாக வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபானந்தனை கைது செய்தனர் இவ்வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது . இக்கொலை தொடர்பாக 35 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டது இவ்வழக்கை விசாரித்த நீதிபதி புருவேஷாத்தமன் நேற்று தீர்ப்பு வழங்கினார் . 

அதில் கிருபானந்தன் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்தார் . இந்த தீர்ப்பை கேட்டு இறந்து சிறுமியின் தாயார் லட்சுமி நீதிமன்றத்தில் தரையில் உருண்டு புரண்டு அழுதது எல்லோர் மனதிலும் ரணத்தை ஏற்படுத்தியது . இக்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .  

அப்படி என்றால்....
பாலியல் பலாத்காரம் செய்தது யார் ? மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தது யார் ? - உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் .
கடமை தவறிய அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் . குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.
பள்ளி அறையில் படிக்க வேண்டிய குழந்தையை , கல்லறையில் படுக்க வைத்துள்ளார்கள் , பாலியல் கொலை செய்த பரதேசியை கண்டித்தும் ,
உரிய விசாரணை, உரிய நீதி வேண்டியும் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின் சார்பாக 9-10-2020 வெள்ளிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் அனைத்து சலுன் கடைகள் அடைத்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
குழந்தை கலைவாணியின் மரணத்திற்குக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக