புதன், 7 அக்டோபர், 2020

யோகி ஆதித்யநாத் யார், எப்படிப்பட்டவர்? நரகத்திற்கு இணையாக நிர்வகிக்கப்படும் உத்தரப்பிரதேச மாநில CM

Balasubramaniyan S : யோகி ஆதித்யநாத் யார், எப்படிப்பட்டவர்? உத்தரப்பிரதேச

முதல்வர் யோகி ஆதித்யநாத் எப்படிப்பட்டவர் என்பது குறித்து அக்டோபர் மூன்றாம் தேதியன்று தி டெலகிராப் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. முதுகுத் தண்டை சில்லிடவைக்கும் அந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்: 1. யோகி ஆதித்யநாத்தின் சொந்தப் பெயர் அஜய் மோகன் பிஸ்ட். கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை இந்தியாவின் சிறந்த முதல்வராக சில கருத்துக் கணிப்புகளில் தேர்வுசெய்யப்பட்டவர்.
2. நரகத்திற்கு இணையாக நிர்வகிக்கப்படும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பாக 19 வயதுப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டார். ஆனால், மாநில அரசு அதிகாரிகள் அது பொய்ச் செய்தி என்றார்கள். ஆனால், இரண்டு வாரங்கள் வெவ்வேறு மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற அந்தப் பெண் முடிவில் தில்லியில் உயிரிழந்தார்.
3. அந்தப் பெண்ணின் உடல், அவரது சொந்த ஊரான ஹாத்ரஸ் என்ற இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு மரக்குவியல் மீது போடப்பட்டு எரிக்கப்பட்டது. குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
4. பத்திரிகையாளர்கள் அருகில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து கேள்வியெழுப்பியபோது, தங்களுக்குப் பேச அனுமதியில்லை என்றார்கள் அதிகாரிகள்.
5. அவர் சாம்பலான சில மணி நேரங்களிலேயே அறிக்கை வெளியிட்ட உ.பி. சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி பிரஷாந்த் குமார் அந்தப் பெண் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படவில்லையெனத் தெரிவித்தார். இதற்கு ஆதாரமாக தடயவியல் ஆய்வகத்தின் அறிக்கை ஒன்றை எடுத்து நீட்டினார். இந்த பிரசாந்த் குமார்தான் காவடிஸ் எனப்படும் சிவபக்தர்கள் ஊர்வலத்தின் மீது, ஹெலிகாப்டர் மூலம் பூ தூவியவர்.
6. இதற்குப் பிறகு ஹாத்ரஸ் விவகாரத்தைக் கையாள ஒரு தனியார் பி.ஆர். நிறுவனத்தைச் சேர்ந்த பிரிசிகா ரோட்ரிக்ஸ் என்பவர் அமர்த்தப்பட்டார். சில பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அவரிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. “ஹாத்ராஸ் பெண் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படவில்லை. தடயவியல் அறிக்கை கூறுகிறது... எல்லா யூகங்களையும் மூட்டைகட்டி வைக்க வேண்டும்.. சாதிச் சண்டைக்குள் மாநிலத்தை தள்ள சதி நடக்கிறது.... இந்த விவகாரத்திற்குப் பின்னால் உள்ள தீய திட்டங்களை சிறப்புப் புலனாய்வுக் குழு வெளிக்கொணரும்...” என்றெல்லாம் அந்த மின்னஞ்சல் அலறியது.
7. உத்தரப்பிரதேச முதல்வராக யோகி பதவியேற்றவுடனேயே, செய்த செயல்கள் மிகுந்த சர்ச்சைக்குரியவை. அவர் பதவியேற்றவுடனேயே தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தார்.
8. பிறகு, தொழிலாளர் சேமநல நிதியிலிருந்து பணத்தை எடுத்து, சந்தேகமான சில வீட்டுவசதி நிறுவனங்களுக்குக் கொடுத்தார். அவற்றின் கதி என்ன ஆனதெனத் தெரியாது.
9. ஜனவரி 2018ல் அரசு நிகழ்ச்சிக்காக மஞ்சரி சதுர்வேதி என்ற கதக் நடனக் கலைஞர் கவ்வாலி பாடல்களுக்கு ஆடவிருந்தார். ஆனால், முதல்வருக்கு இஸ்லாமியப் பாடல்கள் பிடிக்காது என்பதால் அது நிறுத்தப்பட்டது.
10. “பெண்கள் சுதந்திரமாக செயல்படும் திறமையற்றவர்கள் என்பதால் அவர்களை தன்னிச்சையாக விடக்கூடாது” எனக் கருத்துத் தெரிவித்தார்.
11. ஆக்ராவில் இருந்த முகலாய அருங்காட்சியகத்திற்கு சிவாஜியின் பெயர் சூட்டப்பட்டது.
12. யாரை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் கைதுசெய்யக்கூடிய சிறப்பு பாதுகாப்புப் படைச் சட்டத்தை உருவாக்கியிருக்கிறார் யோகி. 1940களில் ஜெர்மனியில் இருந்த நிலையோடு இதனை ஒப்பிடலாம்.
13. உத்தரப்பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு என்பதே கிடையாது. தொடர்ச்சியாக வந்த அரசுகள் இதற்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்ததில்லை என்பதோடு, அந்தக் கட்சிகளின் தொண்டர்களும் சட்டம் - ஒழுங்கை மீறினார்கள். முலாயம், மாயாவதி அரசுகள் இப்படித்தான் செயல்பட்டன. ஆனால், யோகி ஆதித்யநாத்தின் அரசில் இது எல்லை மீறி போயிருக்கிறது.
14. செயற்பாட்டாளர்கள் நினைத்த நேரத்தில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் துன்புறுத்தப்படுவார்கள். அவர்களது புகைப்படம் தெருவில் ஒட்டப்படும். சிஏஏ எதிர்ப்புப் போராளிகளின் பெயர்கள் இப்படி பதாகைகளாக வைக்கப்பட்டபோது, அதனை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு அகற்றியது.
15. கோரக்பூர் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரைக் காப்பாற்றிய டாக்டர் கஃபீல் கான் கைதுசெய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டார். விடுதலையான பிறகு, ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றார்.
16.கோரக்பூர் மடத்தின் தலைவரான யோகி ஆதித்யநாத், எல்லையற்ற அதிகாரத்தைச் செலுத்திப் பழக்கப்பட்டவர். ஹிந்துத்துவா குண்டர்களை வைத்து கலவரத்தைத் தூண்டியதற்காக 2007ல் ஒரு முறை சிறையில் அடைக்கப்பட்டாலும், சட்டத்தை மீறுவதை வெட்கமின்றி செய்பவர்.
17. வெறுப்பு பிரச்சாரம் செய்பவர்கள், சிறுபான்மையினர் மீது தாக்குதல்களை ஏவுபவர்களை கூச்சமில்லாமல் ஆதரிப்பார்.
இந்த ஹாத்ரஸ் பெண் விவகாரத்தினால், தற்போது இந்தியா முழுவதும் ஆதித்யநாத்தின் பெயர் சேதத்திற்குள்ளாகியிருக்கிறது.
டெலிகிராப் நாளிதழில் வந்துள்ள கட்டுரை ஆதித்யநாத் பற்றி புட்டு புட்டு வைக்கிறது. கட்டுரை கமென்ட் பகுதியில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக