ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

RSS Schoolல் கற்றுத் தரும் பாடம்:

Kandasamy Mariyappan : RSS Schoolல் கற்றுத் தரும் பாடம்: 1. போயஸ் கார்டனில் உள்ள 10 கிரவுண்ட் இடத்தில் உள்ள பங்களா, தற்பொழுது அதே பகுதியில் 10 கிரவுண்டில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பங்களா, 25 ஏக்கரில் அமைந்துள்ள சிறுதாவூர் அரண்மனை, பையனூர் பங்களா, கொடநாடு 3,000 ஏக்கர் எஸ்டேட் மற்றும் அரண்மனை, ஹைதராபாத் திராட்சை தோட்டம் மற்றும் பங்களா பற்றி பேசக்கூடாது...
ஆனால் ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் வாங்கிய வீட்டைப் பற்றி மட்டும் பேசவேண்டும்!
2. 91 - 96ல் நடந்த அதிகார அத்துமீறல்களைப் பற்றி பேசக்கூடாது,
ஆனால் 2006 - 11ல் நடந்த அத்துமீறல்களைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்!
3. மயிலாப்பூர் அமிர்தாஞ்சன் கட்டிடத்தை, TANSI நிலத்தை, தஞ்சாவூர் TMC மருத்துவமனையை, பாலு ஜுவல்லர்ஸ் நகைகளை மிரட்டி வாங்கியதை பற்றி பேசக்கூடாது...
ஆனால், எங்கேயாவது ஏதோ ஒரு திமுக நிர்வாகி மற்றவர்கள் நிலங்களை மிரட்டி வாங்கியதை பற்றி மட்டுமே பேச வேண்டும்!
4. தர்மபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகள் எறித்துக் கொன்றது பற்றி பேசக்கூடாது...
ஆனால், திமுக ஆட்சியில் நடந்த தினகரன் பத்திரிகை அறிக்கை பற்றி பேச வேண்டும்!
5. பொதுவாக அரசியல் கட்சிகளில் உள்ள ரவுடித்தனம் பற்றி பேசக்கூடாது...
திமுகவில் மட்டுமே ரவுடிகள் உள்ளனர் என்று பேசவேண்டும்!!!
6. மோடி உத்தமர், வளர்ச்சி நாயகன், மோடியால் நாட்டிற்கு பெருமை என்று மீண்டும் மீண்டும் பேச வேண்டும்.....
திராவிட கட்சிகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எந்த பங்களிப்பையும் செய்யவில்லை என்று பேசவேண்டும்!
RSSன் Targeted Audience...
இதுவரையில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்காத, தங்களை Intellectuals என்று கூறிக்கொண்டு இருக்கும் அந்த 5% வாக்காளர்கள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக