ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

இந்தியாவின் 12000 ஆண்டுகால வரலாற்றை ஆராய தீக்சித், பிஷ்ட், மணி, சந்தோஷ் சுக்லா, ரமேஷ் குமார் பாண்டே, மக்கன் லால், ஸ்ரீவஸ்தவா.......

  Shahjahan R : இந்தியாவின் 12000 ஆண்டுகால வரலாற்றை முழுமையாக ஆராய (!) ஒரு வல்லுநர் (!!) குழு அமைத்துள்ளது மத்திய அரசு. இதில் இடம்பெற்றிருப்பவர்கள் —
தீக்சித், பிஷ்ட், மணி, சந்தோஷ் சுக்லா, ரமேஷ் குமார் பாண்டே, மக்கன் லால், ஸ்ரீவஸ்தவா, முகுந்த் ஷர்மா, சாஸ்திரி, ஆர்.சி. ஷர்மா, மிஸ்ரா, பலராம் சுக்லா, ஆஸாத் கௌஷிக், எம்.ஆர். ஷர்மா
இவர்கள் எத்துறை சார்ந்தவர்கள் என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால்...
• ஆறு பேர் சமஸ்கிருத கல்வித்துறையில் உள்ளவர்கள்.
• வரலாற்று, தொல்பொருள் ஆய்வு அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் எனக் காட்டப்படும் நான்கைந்து பேரும் சங்கிகளின் குரலைப் பேசுகிறவர்கள்.
• ஒருவர் பிராமண சங்கத் தலைவர்.
• ஒருவர் கனடாவில் வசிக்கும் மருத்துவத்துறை ஆய்வாளர். (ஆனால் புல்வாமா முதல் தில்லி கலவரம் வரை சங்கிகளின் குரலை விஞ்ஜானி என்ற பெயரில் தொலைக்காட்சிகளுக்கு வழங்குபவர்.)
• ஒரு தமிழரும் கிடையாது. தென் மாநிலங்களிலிருந்துகூட யாரும் கிடையாது. ஒரு பெண்ணும் கிடையாது.
அத்தனை பேரையும் ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் அனைவரையும் இணைக்கும் ஓர் இழை உண்டு.
அத்தனை பேரும் பிராமணர்கள்
எழுதப்பட இருப்பது இந்திய வரலாறா, பிராமணர்களின் வரலாறா? இல்லை சமஸ்கிருத வரலாறா?
வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்களில் பிராமணர்களைத் தவிர வேறு யாருமே கிடையாதா?
------------------------------------------------------
திருத்தம் : பதிவில் ஒரு பிழை இருக்கிறது. வரலாற்றை ஆராய அல்ல, பண்பாட்டை ஆராய என்று இருந்திருக்க வேண்டும்.
பிழைக்காக வருந்துகிறேன். (பதிவர்கள் திருத்த விரும்பினால் திருத்திக் கொள்ளலாம்.)
ஆனால், அந்தப் பதிவில் கேட்ட கேள்வியில் எந்த மாற்றமும் தேவையில்லை.
ஏனென்றால், பண்பாடு என்பது ஒரு மக்கள் சமூகத்தின் கலைகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், திறமைகள், ஞானம், மதம், உணவு, உடை, என இன்னும் பலவற்றையும் அடக்கியது.
வரலாற்றை ஆராயாமல் 12000 ஆண்டுகால பண்பாட்டை ஆராய முடியாது என்பதாலும் அதே கேள்விகள் பொருந்தும். அதனால்தான் தொல்லியல் ஆய்வு, நிலவியல் ஆய்வு, அருங்காட்சியகம் சார்ந்தவர்கள் அந்தக் குழுவில் இருக்கிறார்கள்.
பண்பாட்டு ஆய்வாளர்களில் பிராமணர்களைத் தவிர வேறு யாருமே இல்லையா என்ற கேள்வியும் பொருந்தும்

1 கருத்து: