ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

ராஜ்யசபாவில் கடும் அமளிகளுக்கு இடையே வேளாண் மசோதா நிறைவேற்றம்!

பாராளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் மீறிவிட்டனர்... மக்கள் பார்க்காமல் இருக்க ராஜ்யசபா டிவி தொடர்பையும் துண்டித்துள்ளனர் -     

வேளாண் மசோதா

NDTV :ராஜ்யசபாவில் இன்று வேளாண் மசோதா தாக்கல் செய்வதற்கு எதிர்கட்சிகள் கடும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இறுதியாக கடும் அமளிகளுக்கு இடையே வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டது.   மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்கட்சிகள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக லோக்சபாவில் இந்த மசோதக்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது அதற்கு ஆதரவு அதிமுக ஆதரவு தெரிவித்திருந்தது      இந்த நிலையில், ராஜ்யசபாவில் வேளாண் மசோதா தாக்கல் செய்வதாக இருந்தது. இதற்கு ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிகள் கடும் எதிர்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில்  திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், சபை தலைவரின் இருக்கைக்கு அருகில் சென்று வேளாண் மசோதாவின் நகலை கிழித்து எறிந்தார்.  வேளாண் மசோதா நிறைவேற்றக்கூடாது என்று கூச்சலிட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சபை தலைவரின் மைக் உடைக்கப்பட்டது. 

பாராளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் மீறிவிட்டனர்... மக்கள் பார்க்காமல் இருக்க ராஜ்யசபா டிவி தொடர்பையும் துண்டித்துள்ளனர் - டெரிக் ஒ பிரையன் தாக்கு
ராஜ்யசபா டிவி தொடர்பு துண்டிப்பு
புதுடெல்லி:

விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவியில் இன்று நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 

ஆனால், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றக்கூடாது எனவும் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த மசோதா தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு முழுமையான ஆய்வுக்கு பின்னரே அமல்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை 
விடப்பட்டது. 

ஆனால், எதிர்கட்சிகள் விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்த மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் வேளாண் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். 

இதனால், எதிர்கட்சிகள் மாநிலங்களவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாடு முழுவதும் நேரடி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த ராஜ்யசபா டிவி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் சற்று நேரம் கழித்து ஒளிபரப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஒ பிரையன்,

‘பாராளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் அவர்கள் (மத்திய அரசு, மாநிலங்களவை துணைத்தலைவர்) மீறிவிட்டனர். இது வரலாற்றில் மிகவும் மோசமாக நாள். நாட்டு மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக அவர்கள் ராஜ்யசபா டிவி தொடர்பையும் துண்டித்துள்ளனர். அவர்கள் ராஜ்யசபா டிவி-யையும் தணிக்கை செய்கின்றனர்’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக