ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

கே.பியை இராணுவத்திடம் நானே காட்டிக் கொடுத்தேன்!

கே.பியை இராணுவத்திடம் நானே காட்டிக் கொடுத்தேன்!
 ilakkiyanet :  புலிகளின் சர்வதேச ஆயுதக் கொள்வனவு பிரிவு பொறுப்பாளராக செயற்பட்ட கே.பி என்ற குமரன் பத்மநாதனை காட்டிக் கொடுத்தது நானே என உரிமைகோரியுள்ளார்  புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணி உறுப்பினராக செயற்பட்ட ரகு என்பவர். அவரது பேட்டியென குறிப்பிட்டு சிங்கள வார இதழில் இந்த தகவல்கள் லெளியாகியுள்ளன.அதில்- விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவு பிரிவு பொறுப்பாளர் கே.பியை, இலங்கை படையினரால் கைது செய்ய முடியவில்லை. அவர் வெளிநாட்டில் இருந்ததே இதற்கு காரணம்.   ஆனால், அவரது இருப்பிடம் எனக்கு தெரியும். நான் கொடுத்த தகவலின் அடிபபடையிலேயே, கே.பியின் இருப்பிடத்தை அடையாளம் கண்டு, அவைரை பிடிக்க முடிந்தது.   மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்காக பிரச்சார பணியில் ஈடுபட்டேன். தற்போது பொதுஜன பெரமுனவி்காக உழைத்து வருகிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக