ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

வரதட்சணையா கேக்குற? போஸ்டர் அடித்து ஒட்டிய மருமகள்! – அலண்டு போன மாமியார்!

webdunia :கோயம்புத்தூரில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து அதை போஸ்டர் அடித்து மருமகளே ஒட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.>கோயம்புத்தூர் செல்வபுரம் பகுதியில் ராசிக்கல் விற்பனை செய்து வருபவர்கள் கல்பனா – ஸ்ரீகாந்த் தம்பதியினர். இவர்களுக்கு ரித்தீஷ் என்ற ஒரு மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரித்தீஷுக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் மகள் அன்னப்பூரணி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்தின் போது கிலோ கணக்கில் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவை வரதட்சணயாக அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அன்னப்பூரணியிடம் மேலும் கோடி கணக்கில் வரதட்சணையும், வீடு, கார் முதலியவையும் கேட்டு கல்பனா மற்றும் குடும்பத்தினர் இம்சித்து வந்துள்ளனர். இதனால் அன்னப்பூரணி சென்னையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். சிறிது காலம் கழித்து வீடு திரும்பியவரை வரதட்சணை இல்லாமல் வரக்கூடாது என கணவர் வீட்டார் விரட்டியுள்ளனர்.
இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்துள்ள அன்னப்பூரணி, இதுகுறித்து போஸ்டர் அடித்து மாப்பிள்ளை வீட்டின் சுற்றுப்புற பகுதிகளிலும் ஒட்டியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக